நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்-
மாமியாரை துஸ்பிரயோகத்திற்குட்படுத்திய மருமகனை தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பிரதேசத்தை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி மற்றும் மாமியாரின் முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் குறித்த இளைஞனை 07.03.2017 மாலை கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் தெரியருகையில் குறித்த இளைஞனின் மனைவி கொழும்பில் பனிபுரிந்து வந்துள்ள நிலையில் மாமியாரின் வீட்டிலேயே இளைஞன் தங்கியுள்ளான். மனைவி இல்லாத நிலையின் நான்கு பிள்ளைகளின் தாயாரான 57 வயதுடைய மாமியாரை பலவந்தமாக துஸ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக பாதிக்கப்பட்ட மாமியார் 07.03.2017 மாலை கொழும்பிலிருந்து வீட்டுக்கு வந்த மகளிடம் கூறியுள்ளார். பின்னர் மனைவியும் மாமியாரும் தலவாக்கலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதையடுத்து இளைஞனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மாமியாரை நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபரை 08.03.2017 நுவரெலியா மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.