காரைதீவு நிருபர் சகா-
இலங்கை ஆசிரியர் கல்வியியலாளர் சேவையின் மூள்றாம்வகுப்பிற்கு தகுதியயாவர்களை ஆட்சேர்ப்புச்செய்வதற்காக 2016ஆம் ஆண்டில் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப்பரீட்சையில் 215தமிழ்மொழிமூல பரீட்சார்த்திகள் அடிப்படைத்தகுதிகளைப் பெற்றிருக்கிறார்கள்.
இந்த 215பேரும் நேர்முகப்பரீட்சையொன்றிற்குத் தோற்றவேண்டும். அதிலிருந்தான் தெரிவுப்பட்டியல் தயாரிக்கப்படுமென்று கல்வியமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார். வடமாகாணத்தைச் சேர்ந்த 101பேர் தெரிவாகியுள்ளனர். 65பேர் கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்தவர்களாவர். அவர்களில் 36தமிழர்களும் 29முஸ்லிம்களும் அடங்குவர்.
வடக்ககிழக்கைத்தவிந்த ஏனைய மாகாணங்களிலிருந்து 36தமிழ்மொழிபேசுவோர் தெரிவாகியுள்ளனர். வடக்குகிழக்கைத்தவிர்ந்த மாகாணங்களிலிருந்து 27தமிழர்களும் 9முஸ்லிம்களும் தெரிவாகியுள்ளனர். ஆங்கிலமொழிமூலம் 13 சிறுபான்மையின தமிழ் முஸ்லிம் பரீட்சார்த்திகள் தெரிவாகியுள்ளனர்.
இவர்களது பெயர்விபரம் கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.