சமையல் மற்றும் சுலோகங்கள் சகிதம் அம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள்.!

காரைதீவு நிருபர் சகா-
ம்பாறை மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் நேற்று செவ்வாய்கிழமை 23ஆவது நாளாக தொடர்ந்தும் புது உத்வேகத்துடன் சத்தியாக்கிரகப் போராட்டத்திலீடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் புதிய சமையல் பாத்திரங்களுடனும் குழந்தை குட்டிகளுடனும் பெருமளவில் வருகைதந்து சமையலில் ஈடுபட்டனர். அத்துடன் புதுப்புது சுலோகங்களயும் தமது கூடாரத்தின் முன் தொங்கவிட்டதுடன் அவர்களும் பதாதைகளைத் தாங்கியவண்ணம் காணப்பட்டனர்.

நல்லாட்சி அரசே பட்டதாரி பட்டதாரிகளின் காத்திருப்பிற்குப் பதில்தான் என்ன? பட்டதாரிகளின் விடியாவாழ்வின் முடியாப்போராட்டம்! போன்ற பல சுலோகங்களைத்தாங்கியிருந்தனர். ஆண்பெண் பட்டதாரிகள் இணைந்து சமயலில் ஈடுபட்டனர். அந்நேரம் குழந்தைகள் அவர்கள் பாட்டில் அநாயாசமாக விளையாடினர். கூடாரத்தினுள் தராசினுள் பட்டங்கள் விற்கப்பட்டன. 

நாளை 23ஆம் திகதிவியாழக்கிழமை பாராளுமன்றத்தில் த.தே.கூட்டமைப்பு சார்பில் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.கே.கோடீஸ்வரன் கொண்டுவரவிருக்கும் விசேட ஒத்திவைப்புப்பிரேரணை தமக்கு வெற்றியளிக்குமா? என்பது தொடர்பில் பட்டதாரிகள் மிகுந்த எதிர்பார்ப்பிலுள்ளனர். கோடீஸ்வரன் எம்.பி. பிரஸ்தாப பட்டதாரிகளை இருதடவைகள் காரைதீவுற்குவந்து சந்தித்து இவ்ஆறுதல் வார்த்தையைக்கூறியிருந்தார்.

காரைதீவு விபுலானந்த சதுக்கமருகே மூவின பட்டதாரிகளும் தொடர்ந்து 23 நாட்கள் போராட்டத்திலீடுபட்டும் இதுவரை எவ்வித தீர்வும் கிடைக்கவில்லையனெ அவர்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர். எனினும் நிரந்தரமான தீர்வுகிட்டும்வரை நாம்போராட்டத்திலிருந்து பின்வாங்கப்போவதில்லையெனவும் அவர்கள் கூறினர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -