கிண்ணியாவில் டெங்கினால் 12பேர் பலி, 1150 பேர் பாதிப்பு

அப்துல்சலாம் யாசீம்-
கிண்ணியாவில் இன்று (14) ம் திகதி வரை 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 1150 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் 71 நபர்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 247 பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம். அஜித் இன்று (14) தெரிவித்தார்.

கிண்ணியாவில் வேகமாக பரவி வரும் டெங்கு நோய்களை கட்டுப்படுத்தும் விதத்தில் பாரிய சிரமதானப்பணிகளையும் மக்களுக்கு விழிப்பூட்டல்களையும் நடாத்தி வருவதாகவும் வீடு வீடாகச்சென்று சோதனைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

டெங்கு பரவும் விதத்தில் காணப்படுகின்ற பாழடைந்த காணிகளின் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதுடன் அதனை மீறி செயற்பட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய டொக்டர் அஜித் மேலும் கூறினார்.

இதேவேளை குறிஞ்சாக்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்திற்குற்பட்ட பகுதியில் 12 பேருக்கு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் 11 பேருக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்ட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -