''முஸ்லிம்களை வெறுக்கும் உன் வேலை வேண்டாம்!'' - வெளியேறிய பெண்

எஸ்.ஹமீத்-
''2001ம் ஆண்டு கல்லூரிப் படிப்பை முடித்ததும் அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் எனக்கு வேலை கிடைத்தது. இறுதியாக நான் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் வேலை செய்யத் தொடங்கினேன். எனது நாடு என்ன கொள்கைகளைக் கொண்டிருக்கிறதோ அந்தக் கொள்கைகளை முன்னேற்றுவதும் பாதுகாப்பதும் எனது பணியாக இருந்தது. நான் தலையில் ஹிஜாப் அணிவாள் என்பதோடு, நான் மட்டுமே மேற்கு அணியில் (West Wing) ஹிஜாப் அணிகின்ற ஒரேயொரு பெண்ணாக இருந்தேன். ஒபாமா நிர்வாகம் என்னை முழுமையாக வரவேற்றதை நான் உணர்ந்து கொண்டிருந்தேன்.

ஏனைய அமெரிக்க முஸ்லிம்களை போல் நானும் 2016 ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் முஸ்லிம்களைப் பற்றி விமர்சித்து வந்ததை மிக்க கலக்கத்தோடு அவதானித்து வந்தேன். இருந்தாலும் நான் தேசிய பாதுகாப்புச் சபையில் தொடர்ந்து பணியாற்ற விருப்பம் கொண்டிருந்தேன். அத்தோடு டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட பின்னர் அவருக்கும் அவரது சகாக்களுக்கும் இஸ்லாம் பற்றிய தெளிவை உண்டாக்க வேண்டுமென்றும் எண்ணியிருந்தேன். மேலும் அமெரிக்க முஸ்லிம்களுக்கு என்னாலான உதவிகளைச் செய்யவும் நினைத்திருந்தேன்.

ஆனால் ட்ரம்ப் பதவியேற்ற எட்டு நாட்களுக்குள் முஸ்லீம் நாடுகளுக்குப் பயணத் தடையை அறிவித்த போது என்னால் எனது பதவியில் தொடர்ந்து இருக்க முடியாது என நான் தீர்மானித்தேன். முஸ்லிம்கள் மீது அச்சுறுத்தலைத் தவிர அவர்கள் அமெரிக்காவின் பிரசைகளாகப் பார்க்கப்படப் போவதில்லை என்பதை உணர்ந்தேன். அதனால் வெள்ளை மாளிகை வேலையை விட்டு வெளியேற முடிவு செய்தேன்.

எனது ராஜினாமாவின் பின்னர் என்னோடு பனி புரிந்தவர்களுக்கு நான் பிரியாவிடை கொடுத்தேன். அப்போது எனது தேசிய பாதுகாப்புச் சபையின் தொடர்பு ஆலோசகரான எனது மேலதிகாரி மைக்கல் அன்டன் என்னிடம் மிகுந்த ஆச்சரியத்தோடு ''நீ வேலையிலிருந்து முழுமையாக விலகிக் கொல்லப் போகிறாயா?'' என்று கேட்டார். எனவே அவரிடம் எனது வெளியேற்றத்துக்கான காரணங்களை விளக்கினேன்.

அரச சேவையென்றாலே ஊழல் நிறைந்தது என்றுதான் நான் நினைத்திருந்தேன்.ஆனால், ஒபாமாவின் கீழ் வேலை செய்தபோது எனது எண்ணத்தை நான் மாற்றிக் கொண்டேன். அந்த நாட்கள் மிக அழகானவை.

12 வயதில் ஹிஜாப் அணியாத தொடங்கியவள் நான். எனது மதம் எனது சமூகம் என்பவற்றுக்கே நான் முக்கியத்துவம் அளிக்கிறேன். மிக்க கஷ்டங்களோடு அகதிகளாக வந்து கொண்டிருந்த மக்களின் வெளியேற்றத்தில் உதிரும் கண்ணீர்த் துளிகளுக்கிடையே நான் இந்த வெள்ளை மாளிகையில் வேலை செய்ய விரும்பவில்லை!''

ருமானா அஹ்மத் என்னும் பங்களாதேஷ் வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்ற பெண்மணியே இவ்வாறு கூறி, மிகப் பெறுமதியான வெள்ளை மாளிகை வேலையை உதறித் தள்ளியிருக்கிறார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -