ஐ.நா.நட்புறவு அமையத்தின் இளைஞர் படையணியில் மலையகம் ஆதிக்கம்..!

ண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் கொள்கை பிரகடன இலக்குகளை நடைமுறைப்படுத்தும் இளைஞர் படையணி தேர்வு நடைபெற்றது. இந் நிகழ்வின் போது, இலங்கை ஐக்கிய நாடுகளின் நட்புறவு அமையத்தின் 2017ம் ஆண்டுக்கான இளைஞர் அபிவிருத்தி படையனியின் தலைவராக இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியம் ரமேஸ்குமார் அவர்கள் தெரிவுசெயய்யப்பட்டதோடு இதன் மத்திய குழு உறுப்பினராக இ.தொ.கா இளைஞர் அணி அமைப்பாளர்களான ராஜமனி பிரசாத் மற்றும் பாலகிருஸ்னன் நிரஞ்சன் அவர்களும் யாழ் மற்றும் காலி மாவட்ட இரு இளைஞர்களும் நியமிக்கப்பட்டனர். 

இதன் மூலம் சர்வதேச இளைஞர் தினம், ஐக்கிய நாடுகளின் இலக்குகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் ஏனைய இளைஞர் சம்பந்தமான அபிவிருத்திகள் போன்றவற்றில் மலையக இளைஞர்களுக்கும் சர்வதேச மட்டத்தில் தங்களின் பங்களிப்புகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. இந்நிகழ்வில் சர்வதேச ஈடுசெய்யும் மருத்துவ திறந்த பல்கலைகழக தலைவர் லக்ஸ்மன் மதுரைசிங்க ,உள்ளக பாராளுமன்ற உறவுகளின் செயலாளர் கலாநிதி.ரொமேஷ் ஜெயசிங்க, முன்னாள் தேசிய மகளீர் விவகார குழுவின் தலைவர் திருமதி.நீலா குணசேகர மற்றும் இலங்கை ஐக்கிய நாடுகளின் நட்புறவு அமையத்தின் தலைவர் கலாநிதி.தேசப்ப்ரிரிய ஆகியோர் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -