களுத்தரை மல்வத்த பிரதேசத்தில் வைத்து சிறைச்சாலை பஸ் வண்டி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வரும் பொலிஸார், இக்குற்றச் செயலுடன் சம்பந்தப்பட்ட குழுவை அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கொலையுண்ட பாதால உலகக் கும்பளின் உறுப்பினருக்கு எதிரான குழுவே இத்தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் பொலிஸாரின் உடைக்கு நிகரான ஒரு நிறத்தில் ஆடை அணிந்து வந்தே, இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். தாக்குதல் நடாத்துவதற்கு வந்த கெப் ரக வாகனம் தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. உயிரிழந்தவர்களில் இருவர் சிறைச்சாலை அதிகாரிகள் எனவும், ஏனையோர் கைதிகள் எனவும் பொலிஸ் தகவல்கள் தெரிவித்துள்ளன.டைலிசிலோன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -