துப்பாக்கிச்சூட்டுக்குள்ளான மட்டக்களப்பு காணி ஆணையாளர் கொழும்வு வைத்தியசாலைக்கு அனுப்பபட்டார்




பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை சோமசுந்தரம் வீதியில் வசித்துவரும் அரச உயர் அதிகாரியான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மற்றும் திருகோணாமலை மாவட்ட பணிப்பாளர் நேசகுமார் விமல்ராஜ்; மீது இனம் தெரியாதோர் துப்பாக்கிச் சூட்டை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

இத் துப்பாக்கிச் சூடு சம்பவம்  22 புதன்கிழமை இரவு சுமார் 7.15 மணியளவில் மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளரின் வீட்டில் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயங்களுக்குள்ளான காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் பணிப்பாளர் என்.விமல்ராஜ் உடனடியாக களுவாஞ்சிக்குடி ஆதார வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அம்புலன்ஸ் மூலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் தீவிர சிகிச்சை பெற்று பின்னர் நேற்று 23 மாலை மேலதிக சிகிச்சைக்காக பொலினாரின் பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இனம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு விரைந்த மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயகொட ஆராச்சி விசாரணைகளை மேற்கொண்டதுடன்,மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிசாரும். மட்டக்களப்பு தலைமையக பொலிசாரும் இணைந்து மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -