நூற்றாண்டினை கொண்டாட இருக்கும் ஓட்டமாவடி மத்திய கல்லூரியில் 1996ம் ஆண்டைய சாதாரனதர வகுப்பு மாணவர்களை ஒன்று சேர்க்கும் முகமாக இன்று 18.02.2017 பிற் பகல் 8மணிக்கு ஸ்டைலிஸ் நிறுவனத்தின் இஸ்தாபகர்களில் ஒருவரான அனஸ் ஆசிரியரின் வீட்டில் 1996ம் ஆண்டைய மாணவர்கள் கலந்து கொண்ட ஒன்று கூடல் இடம் பெற்ற விடயங்களின் பலனாக தொடர்ந்து நண்பர்கள் வட்டம் தங்கு தடைகள் இன்றி இயங்குவதற்காகவும், 1996ம் ஆண்டில் கல்வி கற்ற நண்பர்களை ஒருங்கிணைப்பதற்குமான நிருவாகத்தெரிவு கடந்த 22.02.2017 செவ்வாய்க்கிழமை மத்திய கல்லூரியில் இடம் பெற்றது.
மேலும் இதில் முக்கிய விடயமாக ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் நூற்றாண்டு விழாவிற்கு தேவையான உதவிகளை மத்திய கல்லூரியின் பழைய மாணவ சங்கத்திற்கு 1996ம் ஆண்டைய நண்பர்கள் வட்டத்தினால் முடியுமான உதவிகளை உடனடியாக மேற்கொள்வதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டதுடன் நண்பர்கள் வட்டத்தின் தலைவராக அனஸ் ஆசிரியரும் செயலாளராக நண்பர் பைரூஸ், பொருலாளராக றிஸ்வி தாஸிம் மற்றும் நிருவாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.
