பிறருடைய மானத்தினை விற்று பிழைப்பு நடத்த நினைக்கும் தவிசாளர் -ஷிப்லி பாரூக் வீடியோ

ஓட்டமாவடி அஹ்மட் இர்ஷாட்-

பிறருடைய மானத்தினை விற்று பிழைப்பு நடத்த நினைக்கும் தவிசாளர் பசீரினுடைய கருத்துக்களில் நம்பிக்கை வைக்க முடியாது. ஷிப்லி பாரூக்.

வீடியோ குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக ஷிப்லி பாரூக்கின் கருத்துக்கள்:-

தவிசாளர் பசீர் சேகுதாவூத்தினுடைய குற்றச்சாட்டுக்களில் இருந்து தெளிவாகும் விடயமானது தனக்கு தேவையான எல்லா அரசியல் அபிலாசைகளும் அதிகாரங்களும் கட்சியினைல் கிடைத்த பொழுது தான் அதனை அனுபவித்துக்கொண்டு இருந்த கால கட்டத்தில் தலைவருக்கு எதிராக எதனையும் பேசியதும் இல்லை அல்லது அவர் பேச வேண்டிய தேவை தவிசாளருக்கு ஏற்பட்டதுமில்லை.

அத்தோடு நாங்கள் நம்புக்கின்ற பொய்யான விடயங்களாக இருக்கின்ற, கற்பனை பன்னக்கூட முடியாத இவ்வாற்றான ஆதாரம் இருக்கின்றது என்ற குற்றச்சாட்டுக்களை எங்களுடைய தலைவர் அப்துர் ரவூர் ஹிபத்துல் ஹக்கீம் மீது அன்று வெளியிடாமல் இருந்தமைக்கான காரணம்- தவிசாளர் கட்சியினூடாக கிடைத்த தேசியப்பட்டியல், அரசியல் அதிகாரங்கள் மற்றும் இன்னபிர சுக போகங்களை அனுபவித்து கொண்டிருந்தமையும், மேலும் குறித்த வரப்பிரசாதங்களை எதிர்காலத்திலும் அனுபவிக்கலாம் என்ற ஒரே விடயமே முக்கிய காரணமாகும்.

இன்றைய நிலையில், கட்சியினால் வழங்கப்பட்டு வந்த தேசியப்பட்டியல் இல்லாமல் போகின்றது, அல்லது கட்சிக்குள் தனக்கு இருந்த கெளரவம் இல்லாமல் போய்விட்டது என்ற காரணத்தில் ஊடகங்களில் எதையாவது உண்மைகளாக சோடித்து வெளிப்படுத்தி கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தி தவிசாளர் பசீர் சாதித்துக்கொள்ள நினைக்கும் விடயமாகவே இதனை நாங்கள் பார்க்கின்றோம். ஏன் என்றால் எங்களுடைய கட்சியின் கடந்த இரண்டு உயர் பீட கூட்டங்களின் பொழுது எங்களுடைய உயர் பீட உறுப்பினர்கள் தெளிவாகாக பேசியதினால் ஏற்பட்ட சலசலப்பிற்கு எவ்வித பதிலும் கூற முடியாமல் பசீர் சேகு தாவூத் வெளியேறி சென்றமையும், அந்த நிலைமையினை கட்டுப்படுத்துவதற்கு எங்களுடைய தலைமை நடந்து கொண்ட விதமும் எங்களுடைய முஸ்லிம் சமூகத்தினை சரியான முறையில் தலைமை வழி நடத்துகின்றார் என்பதனை தேசியத்திற்கு தெளிவு படுத்தி நிற்கும் விடயமாக அமைந்திருந்தது..

இதில் நான் குறிப்பாக முஸ்லிம்கள், கலீமா சொன்னவர்கள், என பேசுகின்ற நாங்கள் கலீமாவினுடைய பன்பாடுகளையும், பழக்கங்களையும், அதனுடைய ஒழுக்க விழுமியங்களையும் தங்களுடைய வாழ்க்கையில் எடுத்து நடப்பவர்களாக இருக்க வேண்டும். மனிதன் என்ற வகையில் ஓவ்வொருவரும் பிழை செய்யக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டிருகின்றனர். தனிப்பட்ட ரீதியாக மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பிழைகள் செய்திருந்தால் அதனை இறைவனிடத்தில் நிரூபித்து அதற்காக பிராயசித்தங்களை தேடிக்கொள்வதே இஸ்லாமிய சட்டத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ள விடமாகும். மாறாக இவ்வாறான பழிகளையும், அபாண்டங்களையும், இன்னொருவர் மீது சுமத்தி சுகபோகங்களுக்காவும், சமூகத்தினை பிளவு படுத்தும் செயல்களுளை செய்ய துணியும் செயற்பாட்டாளர்களை ஒரு போதும் நாங்கள் விட்டு கொடுக்கவும் கூடாது அல்லது அவர்களுக்கு பின்னால் செல்லவும் கூடாது என்பதே என்னுடைய பணிவான வேண்டு கோளாக இருக்கின்றது.

ஆகவே தவிசாளர் பசீர் சேகுதாவூத் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்கு கட்சியின் தலைவர் பணத்தினை பெற்றுக்கொண்டு எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஒரு கோடி ரூபாய் வீதம் கொடுத்த நிலையில் தனக்கும் ஒரு கோடி ரூபாய் தந்தார் என அல்லாஹ் மீது ஆணையிட்டு இது வரைக்கும் கூறாத தவிசாளர் தற்பொழுது கூறியுள்லமைக்கான காரணம் என்ன? எனபதே இங்கு முக்கியமாக சிந்திக்க வேண்டிய விடயமாகும். ஜனாதிபதி தேர்தல் இடம் பெற்று இரண்டு வருடங்கள் சென்ற பிறகு இவ்வாறு எமது தலைவர் மீது குற்றம் சுமத்துவதில் உண்மை இருக்கின்றாதா? அல்லது பொய் இருக்கின்றதா? என பரீசீலனைக்கு உட்படுத்துவதற்கு முன்பாக நான் ஒரு விடயத்தினை கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

அதாவது ஒருவருடைய மானத்தினை விற்று அதில் பிழைப்பு நடத்த நினைக்கும் எங்களுடைய தவிசாளர் பசீர் சேகு தாவூத் இந்த ஒரு கோடி ரூபா விடயத்தில் எந்தளவு அவருடைய நம்பகத்தன்மை இருக்கும் என்பதனை எங்களுக்கு மிக முக்கியமாக கேள்விக்கு உட்படுத்த வேண்டிய தேவை இருக்கின்றது.

ஒரு மானிதனுடைய மானத்தினை கூட விற்று தன்னுடைய விடயத்தினை சாதிக்க நினைக்கின்ற ஒருவர் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துவது என்பது பெரிய விடயமல்ல. பிறருடைய மானத்தையாவது விற்கு அதில் பிழைப்பு நடத்த வேண்டும் என திரிக்கின்ற எங்களுடைய தவிசாளர் இவ்விடயத்தினை FCID மூலமாகவோ அல்லது சட்டத்தினூடாகவோ அனுகாமல் இவ்வாறு ஒரு தனி மனிதனை மானபங்கப் படுத்தும் செயலில் ஈடுபடுகின்ற விடயத்தினை பார்கின்ற பொழுது தவிசாளர் பசீர் சேகுதாவூத் தனக்கென வைத்திருந்த நம்பகத்தன்மையினை முற்றாக அழித்து விட்டார் என்பதே இறுதியான எங்களுடைய முடிவாக இருக்கின்றது.

அந்த வகயிலே இதற்கு பிறகு எந்த விடயத்திலும் நாங்கள் தவிசாளர் பசீர் சேகு தாவூத்துடன் உடன்பட்டு செல்ல முடியாது என்பதையே இறுதியாக நாங்கள் கூறிக்கொள்ள விரும்புகின்றோம் என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் பொறியியலாளருமான ஷிப்லி பாரூக்கிடம் உங்களுடைய கட்சியின் தலைவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் பொழுது பல கோடிகளை பெற்று ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினருக்கும் ஒரு கோடி கொடுத்ததோடு தவிசாளர் பசீர் சேகு தாவூத்திற்கும் ஒரு கோடி கொடுக்கப்பட்டதாக அவர் அல்லாஹ் மீது ஆணையிட்டு கூறியுள்ளமை சம்பந்தமாக உங்களின் கட்சியினை தலைமை திரைக்கு பின்னால் சமூகத்திற்கு எதிரான செய்கின்ற பிழைகளை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள் என்ற கேள்விக்கே மேற் கண்டவாறு ஷிப்லி பாரூக் பதிலளித்தார்.

மேலும் தவிசாளர் பசீர் சேகு தாவூத்தினால் சுமத்தப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் சம்பந்தமாக பொறியியலளர் ஷிப்லி பாரூக்கிடம் கேட்கப்பட்ட பல முக்கிய கேள்விகளுக்கான விரிவான பதில்கள் அடங்கிய காணொளியானது எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -