எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அட்டாளைச்சேனையில் இருந்து ஷாஹிரா இஸ்மாயில்

ட்டாளைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த சாஹிரா இஸ்மாயில் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் பெண்களின் குரலாக, பெண்களுக்கான உரிமைகளை நேரடியாக அரசியலில் இருந்து பெற்றுக்கொள்ளவும் பெண்கள் களத்தில் இருந்து நிலமைகளைக் கண்காணிக்கவும் தான் அரசியலில் குதிக்கவுள்ளதாக இம்போட்மிரர் இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.

சாஹிரா இஸ்மாயில் அட்டாளைச்சேனை தேசிய பாடசாலையில் ஆரம்பம் முதல் உயர்தரம் வரை கல்வி கற்று பட்டப்படிப்பினை தென்கிழக்குப் பல்கலைக் கழத்தில் தொடர்ந்து கலைமாணிப் பட்டத்தைப் பூர்த்திசெய்தார்.

இவர் உள்ளூர் மற்றும் தேசிய, சர்வதேச அரச சார்பற்ற சமூக உதவி அமைப்புக்களுடன் இணைந்து வறுமை நிலமையில் உள்ள ஏராளமான மக்களுக்கு உதவி புரிந்துள்ளார். அத்துடன் சமாதான முன்னெடுப்புக்கள், சிறுவர் இளைஞர் அபிவிருத்தி, பெண்கள் உரிமை தொடர்பாக அதிகமாகக் குரல் கொடுத்து அதன்பால் சேவைகள் செய்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

அடுத்த பதிவில் அவருடனான நேர்காணல் இடம்பெறும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -