நாளை உகந்தமலையில் தைப்பூசத்திருநாள் பெருவிழா!




காரைதீவு நிருபர் சகா-


ரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகனாலயத்தில் நாளை 9ஆம் திகதி வியாழக்கிழமை தைப்பூசத்திருநாள் பெருவிழா விமரிசையாக நடைபெறவுள்ளது.

ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் தலைமையில் நடைபெறவுள்ள தைப்பூசத்திருவிழாவில் காலை 10மணிமுதல் பாற்குடபவனி பாலாபிசேகம் அபிசேகம் அலங்கார பூசை என்பன இடம்பெறும்.

மாலை 5மணி முதல் திருவிளக்குப்பூசையுடன் வசந்தமண்டப பூசை மற்றும் சுவாமி உள்வீதியுலா வருதலும் இடம்பெறுமென ஆலய திருப்பணிச்சபைச் செயலாளர் கே.சிறிபஞ்சாட்சரம் தெரிவித்தார்.

பாற்குடபவனியானது மலையிலுள்ள வள்ளிநாயகி ஆலயத்திலிருந்து ஆரம்பித்து முருகானாலயத்தில் நிறைவடையும்.அடியார்கள் செம்புடன் கலந்துகொள்ளவேண்டும். அதற்கான பால்; தம்பிலுவில் ரமேஸ்குமார்(நோர்வே) தம்பதியினரின் அனுசரணையுடன் ஆலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சிறிபஞ்சாட்சரம் மேலும் தெரிவித்தார்.

நாளைள பகல் மட்டு.ஆசிரியர் கலாசாலையின் ஓய்வுநிலை அதிபர் வே.லட்சுமிசுந்தரத்தின் அன்னதான உபயம் இடம்பெறும்.

தைப்பூசத்திருநாள் பெருவிழாவிற்கு வருகைதருவோர் நலன்கருதி விசேட பஸ் போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக செயலாளர் சிறிபஞ்சாட்சரம் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -