அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம் வடக்கு நோக்கி பயனம்..!

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனம்
எம்.ஜே.எம்.சஜீத்-
அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் கிழக்கிலிருந்து வடக்கிற்கான மூன்று நாள் சுற்றுப்பயணம் ஞாயிற்றுக்கிழமை(26) காலை ஆரம்பமாகவுள்ளது. அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவர் கலாபூஷணம் மீரா இஸ்ஸடீன் தலைமையில் 25 ஊடகவியலாளர்கள் இச்சுற்றுப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளனர்.

இச்சுற்றுப் பயணம் திருகோணமலை மற்றும் புல்மோட்டை ஊடாகச் சென்று முல்லைத்தீவு வழியாக யாழ்ப்பாணம் சென்றடையவுள்ளது. யாழ்ப்பாணத்தின் வரலாற்று சிறப்பு மிக்க முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளதுடன் வடமாகாண சபை முதல்வர் மற்றும் ஆளுனர் உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்களையும் சந்தித்து பேசவுள்ளனர்.

மேலும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஊடக அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதுடன் அங்குள்ள ஊடகத் துறைசார்ந்த நிறுவனங்களையும் சென்று பார்வையிடவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -