கேப்பாப்புலவு மக்களுக்காக ஆதரவு தெரிவித்து காத்தான்குடியில் போராட்டம்..!

பழுலுல்லாஹ் பர்ஹான்-
மது ஆக்கிரமிக்கப்பட்ட காணி நிலங்களை மீட்பதற்காக வேண்டி தொடர்ச்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்துள்ள முல்லைத்தீவு -கேப்பாப்புலவு மக்களின் நியாயமான உரிமைப் போராட்டத்திற்கு கரம் கொடுக்கும் வகையில் அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து நேற்று 24 வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு காத்தான்குடியில் ஜூம்மா தொழுகைக்குப் பின்னர் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இடம்பெற்றது.

தேசிய ஒருமைப்பாட்டிற்கான முற்போக்கு பேரவை,காத்தான்குடி அரசியல் களம் என்பன இணைந்து காத்தான்குடி-05 ஜாமியுழ்ழாபிரீன் ஜூம்மா பள்ளிவாயல் முன்பாக ஏற்பாடு செய்த மேற்படி கவனயீர்ப்பு போராட்டத்தில் காத்தான்குடி முஸ்லிம் மக்கள் உட்பட இளைஞர்கள் ,தேசிய ஒருமைப்பாட்டிற்கான முற்போக்கு பேரவை,காத்தான்குடி அரசியல் களம் என்பவற்றின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.

குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டோர் மூவின மக்களின் ஒன்றிணைந்த குரலுக்கு அரசே செவிமடு கேப்பாப்புலவு மக்களின் காணிகளை விடு,பூர்வீக வாழ்விடம் கோரி கவனயீர்ப்பு போராட்டம்,அரசே எமது நிலத்தில் குடியேறவிடு,எம் நிலம் உரிய முறையில் எமக்கதை வழங்குவது அரசே உன் கடமை,மூவின மக்களின் ஒன்றிணைந்த குரலுக்கு அரசாங்கமே செவிமடு,நல்லாட்சி அரசாங்கத்தில் எமது ஊர் எமக்கு வேண்டும்,எமது சொந்த இடத்தில் குடியேற்று, கேப்பாப்புலவு எங்கள் நிலம் இராணுவமே வெளியேறு,படையினர் முகாமிட்டிருப்பது எம் கொட்டில்களை அழித்து எம் நிலம் எம் உரிமை அரசே எம் கோரிக்கைகளுக்கு செவிமடு,நல்லாட்சி அரசே கேப்பாப்புலவு மக்களை அவர்களின் சொந்த காணிகளில் வாழ அனுமதி கொடு போன்ற பல்வேறு தமிழ் வசனங்கள் உட்பட ஆங்கில,சிங்கள வசனங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -