ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை மாவட்ட தொழில் நுட்பக் கல்லூரியில் கற்கும் முஸ்லீம் மாணவர்கள் தாடி வைக்க முடியாது என தெரிவிப்பதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர் தாடியை இஸ்லாமிய மார்க்க ஒழுக்கத்துக்கு தடை விதிப்பதாகவும் மதச் சுதந்திரம் இதனால் மீறப்படுவதாகவும் முஸ்லீம் மாணவர்கள் தெரிவிக்கின்றனர் தாங்கள் தாடியை வளர்த்து சென்றால் அங்கிருக்கும் போதனாசிரியர்கள் தடை செய்வதாகவும் அகற்றுமாறும் மாணவர்களை கட்டாயத்தின் பேரில் அகற்ற வைக்கின்றனர் .
நல்லாட்சி அரசில் இவ்வாறான மதச் சுதந்திரம் மீறப்படுவதானது எம்மவர்களுக்கும் மாணவ சமுதாயத்துக்கும் கவலையளிக்கிறது இவ் விடயம் தொடர்பாக முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லீம் அரசியல் தலைமைகளும் மௌனம் சாதிக்க முடியாது எமது உரிமைகளை நாமே பெறவேண்டும் பெற்று சுதந்திரமானவர்களாகவும் கற்றல் செயற்பாடுகளில் மத நல்லிணக்கத்துடன் தொழில்நுட்பக் கல்லூரிகளில் கற்க வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்க தலைமைகள் முன்வர வேண்டுமென்பதே இவ் மாணவர்களின் கோரிக்கையாகும் இவ் விடயத்தில் அரசியல் தலைமைத்துவம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் தீர்க்கமான முடிவொன்றைப் பெற்றுக் கொடுப்பதிலும் தீவிரமாக செயற்பட வேண்டும் இல்லாதூ போனால் எம்மாணவர்கள் உளரீதியான பாதிப்பினையும் எதிர்நோக்க வேண்டிய நிலைக்கும் தள்ளப்படலாம்
