இலங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 69 வது சுதந்திர தின நிகழ்வு..!

ஏ.எல்.டீன்பைரூஸ்-
லங்கை ஜனநாயக சோஷலிசக் குடியரசின் 69 வது சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடி ஷூஹதா சதுக்கத்தில் காத்தான்குடி பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்.ஏ.சீஎம்.பதுர்தீன் தலைமையில் இடம் பெற்றது.

மேற்படி 69 வது சுதந்திர தின நிகழ்வு காத்தான்குடி அரசியல் களம், கே.கே.வை.ஷபாப் இளைஞர் சமூகம், ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாலர் பாடசாலை, ஷெரீப் கொமினிட்டி சென்டர், காத்தான்குடி பீச் குரூப் என்பவற்றினால் மிகவும் சிறப்பான முறையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

பிரதம அதிதியாக புணர்வாழ்வு, புணரமைப்பு,மீழ்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் சார்பில் இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஈ.எம்.றுஸ்வின் கலந்து கொண்டதுடன் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் முன்னால் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எல்.எம்.பரீட், முன்னால் நகர சபை உறுப்பினர் றவூப் ஏ மஜீட், காத்தான்குடி முன்னால் காழி நீதிபதி மௌலவி எஸ்.எம்.அலியார் (பலாஹி), காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளன தலைவர் பொறியியலாளர் ஏ.எம்.தௌபீக், காத்தான்குடி அரசியல் களம், கே.கே.வை.ஷபாப் இளைஞர் சமூகம், ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாலர் பாடசாலை, ஷெரீப் கொமினிட்டி சென்டர், காத்தான்குடி பீச் குரூப் ஆகியவற்றின் அங்கத்தவர்கள், சரவ மதத்தலைவர்களான தர்மாத்தன தேரர், கிறிஸ்தவ போதகர் அருமைராஜா, இந்து மத குரு தீஸ்வரசர்மா உட்பட கல்விமான்கள், பொது மக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வு சிறப்பாக இடம்பெற கூட்டுப் பொறுப்புடன் செயல்பட்ட ஏ.ஜீ.எம்.றிஸ்வி (தலைவர் காத்தநகர் அரசியல் களம்) எம்.ஐ.எம்.நாசர் (தலைவர்) கே.கே.வை ஷபாப், இளைஞர் சமூகம்) கே.எம்.றமீஸ் (தலைவர் பீச் குரூப்) எம்.எஸ்.எம்.மொஹிதீன் சாலி (தலைவர் ஹிஸ்புழ்ழாஹ் கிட்ஸ் பாலர் பாடசாலை) எம்.ஐ.எம்.ஜவாஹிர் (தலைவர் சரீப் கொமினிட்டி சென்டர்) எம்.ஐ.றஹீம் (தலைவர் காத்தநகர் அரசியல் களம்) ஆகியோர்களின் செயல்பாடு வரவேற்கதக்கது என அதன் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -