பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த 4 பேருக்கு அபராதம்.!

க.கிஷாந்தன்-
ஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள கடைகளில் மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றி வளைப்பின் போது பாவனைக்கு உதவாத பொருட்களை விற்பனை செய்த விற்பனை நிலைய உரிமையாளர்கள் நான்கு பேருக்கு எதிராக அட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மஸ்கெலியா ரிகாடன் பகுதியிலிருந்து நல்லதண்ணி வரை வீதியோரங்களில் உள்ள 10 விற்பனை நிலையங்கள் மஸ்கெலியா பிரதேச பொது சுகாதார அதிகாரிகளினால் சோதனையிடப்பட்டது.

விலைப்பட்டியல் காட்சியப்படுத்தாமை, காலாவதியான பொருட்களை வைத்திருந்தமை, கூடிய விலைக்கு பொருட்களை விற்பனை செய்தமை, உத்தரவாதம் அளிக்கப்படாமல் விற்பனை செய்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகளின் பேரிலேயே இவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டிருந்தது.

இதன்போது நான்கு பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் அட்டன் மஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிவான் பிரசாத லியனகே தலா 5000 ரூபா வீதம் 20,000 ரூபா அபராதம் விதித்துத் தீர்ப்பளித்தார்.

நுவரெலியா மாவட்ட சுகாதார அதிகாரி காமினி பெரேரா பணிப்புரையின் பேரிலேயே மஸ்கெலியா பொது சுகாதார அதிகாரிகள் இச் சுற்றுவளைப்பை மேற்கொண்டமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -