அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை பொது வைத்தியசாலை சிறுவர் விடுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட நோயாளர்கள் சிகிச்சை பெற்று வருவதுடன் டெங்கு நோயினால் 25ற்கும் மேற்பட்ட சிறார்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை அதிகாரியொருவர் தெரிவித்தார்.
01ம் 02ம் சிறுவர் விடுதிகளில் எழுபது கட்டில்கள் மாத்திரம் காணப்படுவதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறார்கள் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கட்டில்கள் கிடைக்காத பட்ஷத்தில் நோயாளர்களின் பெற்றோர்களுக்கும் கடமையிலுள்ள தாதியர்களுக்குமிடையில் மனக்கசப்புகள் ஏற்படுவதாகவும் தெரியவருகின்றது.
இதேவேளை அதிகமாக சிறார்கள் அனுமதிக்கப்படுவதினால் விடுதியில் தாதியர்கள்,சிற்றூழியர்கள் குறைவாக கடமைக்காக நியமிக்கப்படுவதினால் நோயாளர்களை கவனிப்பதில் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. நோயாளர்கள் அதிகரிப்பதினால் கட்டில்களையும் வசதிகளையும் செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நோயாளர்களின் உறவினர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்
