தம்புள்ளை பள்ளிவாயலுக்கு 20 பேர்ச் காணி வழங்க முடியும் - அமைச்சர் சம்பிக்க

தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு 20 பேர்ச் காணியே வழங்க முடியும் என பாரிய நகரம் மற்றும் மேற்குப் பிராந்திய அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

நேற்று முன்தினம் பத்தரமுல்லையில் அமைந்துள்ள அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் அமைச்சில் தம்புள்ளை பள்ளிவாசல் காணி விவகாரம் மற்றும் தம்புள்ளை நகர அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் 17 பேரும் கையொப்பமிட்டு, நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு மகஜர் ஒன்றைக் கையளித்துள்ளனர். அந்த மகஜரில், தற்போதைய தம்புள்ளை ஹைரியா ஜும்ஆ பள்ளிவாசல் கழிவறைகள் மற்றும் கட்டிடங்கள் உட்பட 41.49பேர்ச் காணியில் அமைந்துள்ளதாகவும், வாகனத் தரிப்பிட வசதியைக் கருத்திற்கொண்டு பள்ளிவாசலுக்கு 80 பேர்ச் காணி ஒதுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும் தற்போழுது உள்ள பள்ளிவாசல் 20 பேர்ச் காலையிலேயே அமைந்துள்ளதால், அந்தளவு காணியே வழங்க முடியும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். மேலும் தம்புள்ளை பள்ளிவாசலுக்கு காணி ஒதுக்குவது தொடர்பில் பௌத்த தேரர் எதிர்ப்பு வெளியிட்டபோதும், பள்ளிவாசல் வேறு இடத்துக்கு மாற்றப்படவுள்ளதால் அவசியம் காணி வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். 
DC 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -