வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் தடுத்து விடுவார்களோ - மாஹிர்

எம்.எம்.ஜபீர்-
லங்கை திருநாட்டில் புதியதொரு அரசியல் அமைப்பை ஏற்படுத்தி அந்த அரசியல் அமைப்பிலே சிறுபான்மை மக்களுக்கு உரிய தீர்வை பெற்றுத்தருவோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களை தமது வாக்குறுதிகளை நிறைவேற்றவிடாமல் பேரினவாத சக்திகள் தடுத்து விடுமோ என்ற அச்சம் தற்போது எங்களுடைய மனதில் ஏற்பட்டுள்ளன. எங்கு பார்த்தாலும் சிறுபான்மை மக்களுக்கு அச்சமூட்டக்கூடிய சவால் விடுக்கக்கூடிய செயல்கள்தான் இப்போது இடம்பெற்றுக் கொண்டு இருக்கின்றன என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஐ.எல்.எம்.மாஹிர் தெரிவித்தார்.

சம்மாந்துறை மற்றும் நாவிதன்வெளி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு சீருடைகள் மற்றும் பாலர் பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்ற போது அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
தேசிய அரசாங்கத்தினை பொறுத்த வரையில் சிறுபான்மை மக்கள் தான் இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தியவர்கள். அந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்டு இரண்டு வருடங்கள் முடிவடைந்து மூன்றாவது வருடத்தில் காலடி வைத்துள்ளோம். இருந்தாலும் நாங்கள் எதிர்பார்த்த அந்த அரசியல் அமைப்பிலே சிறுபான்மை மக்களுக்கு உரிய தீர்வு உண்மையில் கிடைத்துள்ளதா என்றால் அந்த கேள்விக்கு சற்று தாமதித்துதான் விடைதேட வேண்டியிருக்கின்றது.


ஏன் என்றால் எந்த எதிர்பார்ப்புடன் இந்த ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தினேமோ அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாத ஒரு சூனியமான எதிர்காலத்தினை நோக்கியே பயணித்துக் கொண்டு இருக்கின்றோமா என்ற கேள்வியே எங்களிடத்தில் எழுகின்றன. இருந்தாலும் எங்களுடைய தலைவர்கள் மிகவும் சமயோசிதமாக பொறுமையுடன் காய்களை நகர்த்தி வருகின்றார்கள். பெரும்பான்மை முஸ்லிம்களுடைய அங்கீகாரத்தினை பெற்ற எங்களுடைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் கௌரவ அமைச்சர் ரவூப் ஹக்கீம் மிகவும் ராஜதந்திர ரீதியிலே அரசியல் முன்னெடுப்புக்களை எடுத்துக் கொண்டு இருக்கின்றார். இந்த வகையிலே நாங்கள் எதிர்காலத்தில் நம்பிக்கை வைக்கக்கூடிய தலைவர்களாக இருக்கின்றார்கள்.


அதேபோன்று தமிழர்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சி தலைவருமான கௌரவ சம்மந்தன் ஐயா உட்பட ஏனைய சிறிய கட்சிகளின் தலைவர்கள் இப்போது அரசியல் தீர்வை நோக்கிய சில முன்னெடுப்புக்களை முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றார்கள். எது எவ்வாறு இருந்தாலும் அமையப் போகின்ற புதிய அரசியல் அமைப்பிலே எங்களுடைய மக்களின் மதம், காலச்சாரம், உரிமைகள், எங்களுடைய இருப்புக்கள் உறுதி செய்யப்பட வேண்டும் என்பதே எங்களுடைய எதிர்;பார்ப்பாக இருக்கின்றது. இந்த வகையிலேயே தலைவர்கள் மீது நம்பிக்கை வைத்து நாங்கள் பயணித்துக் கொண்டிருக்கின்றோம்.

இவ்வாறான அமைதியான சூழ் நிலையில் தமிழ், முஸ்லிம் சமூகங்கள் இணைந்து பயணித்துக் கொண்டு போகின்ற போது இந்த இரு இனங்களுக்கு இடையேயும் குழப்பத்தினை ஏற்படுத்தி மீண்டும் ஓர் இருண்ட யுகத்தினை ஏற்படுத்த சில பேரினவாதிகள் கங்கணம் கட்டிக்கொண்டு செயற்பட்டு வருகின்றனர். அவ்வாறானவர்களின் நடவடிக்கைகளுக்கு நாங்கள் பலியாகிவிடக் கூடாது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -