அஸ்ரப் நகரில் மண்அகழும் திட்ட அனுமதிப்பத்திரம், இரானுவ முகாமை இரத்து செய்ய நடவடிக்கை

சப்னி அஹமட்-
ட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட ஒலுவில் அஷ்ரப் நகர் பிரதேசத்தின் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அப்பிரதேசத்தில் மக்களுக்கு இடஞ்சலாகவுள்ள இரானுவ முகாம் மற்றும் மண் ஏற்றும் அனுமதிப்பத்திரம் போன்றவற்றினை இரத்துச்செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாக கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் தெரிவித்தார்.

ஒலுவில் பிரதேசத்தின் அஸ்ரப் நகர் கிராம மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். முஹம்மட் நஸீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு அங்குள்ள இளைஞர்களையும் பள்ளிவாயல் பிரமுகர்களை சந்திக்கும் நிகழ்வு கடந்த 2017.01.06 ஆம் திகதி இடம்பெற்றது அதன் போது கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்; 

அஸ்ரப் நகர் கிராமத்தில் மக்கள் படும் பிரச்சினைகள் தொடர்பில் நான் அறிந்தவன் என்றவகையில் அரசியல் அதிகாரம் உள்ள போது என்னால் இப்பிரதேசத்திற்கு தேவையான சகல நடவடிக்கைகளையும் பெற்றுக்கொடுக்க முன்வருவேன் அது போல் இப்பிரதேசத்தின் முக்கிய பிரச்சினையாக யானை பிரச்சினைள் இருக்கின்றது இது தொடர்பில் நான் விசேட கவனம் செலுத்திவருகின்றதுடன் அன்மையில் இடம்பெற்ற அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்திலும் அஸ்ரப் நகர் பிரதேசத்தில் உட்புகும் யானையை உட்புகுவிடாமல் தடுப்பது தொடர்பாகவும் பேசப்பட்டது அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இங்கு குறைந்தளவிளான மக்களே வாழ்கின்றார்கள் ஆனால் அவர்களுக்கான சரியான பொருளாதார வசதிகள் இன்மையினால் பெரும் கஷ்டத்திற்கு உள்வாங்கப்படுகின்றார்கள் என்பதை நான் அறிகின்றேன் அந்த வகையில் இங்கு வாழும் மக்களுக்கும் பெரும் இடைஞ்சலாகவுள்ள மண் அகழும் வேலைகளினால் மக்கள் பெரிதும் சுகாதார பாதிப்புக்காகின்றதுடன் வீதிகளும் பழுதடைந்து வருகின்றது ஆகவே மன் அகழும் திட்டத்திற்கான அனுமதிப்பத்திரத்தினை குறைத்து தடுக்க வேண்டும் என்பதுடன் இது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. 

இப் பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் ஒரு பகுதியில் மரம் நடுதல் எனும் போர்வையில் பெரும்பான்மையினருக்கு காணி வழங்கப்பட்டமையடுத்து, நானும் அமைச்சர் ரவூப் ஹக்கீம், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரிடம் தொடர்புகொண்டு கலந்துரையாடியதுக்கினங்க, அவற்றை உடனடியாகத் தடை செய்வதாக, அரசாங்க அதிபர் எங்களிடம் உறுதியளித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகள், எமது மக்களுக்குத் தொடர்ந்தும் ஏற்படாமல் இருப்பதற்கு நாம் எல்லோரும் ஒற்றுமைப்பட வேண்டும். ஒற்றுமைப்பட்டால் எதையும் சாதித்து விடலாம். அதேபோல், பாலமுனை பிரதேசத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமையும் அகற்ற வேண்டும். அங்குள்ள இராணுவத்தினர் எங்கள் சமூகத்துக்கு எதிராகச் செயற்படுபவர்களாகவே இருக்கின்றார்கள். யுத்த காலத்தில் இல்லாத இராணுவ முகாம் இப்போது எதற்கு? எங்களுக்கு எவ்வித பாதுகாப்பும் தேவையில்லை. உடனடியாக அவ் இராணுவ முகாமையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார்.  
மேலும், இப்பிரதேசத்தின் உள்ளவர்கள் தொழில் பிரச்சினையால் பெரும் அசெளகரியங்களுக்குளாகின்றனர் அந்தவகையில் நான் கிழக்கு மாகாண முதலமைச்சருடன் பேசி இங்கு தொழில் பேட்டை ஒன்றை அமைப்பத்ற்கு திட்டமிட்டுள்ளதாகவும், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட பெண்களுக்கான வாழ்வாதார திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும், கல்விக்கு விசேட திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும், வீதிதிருத்த வேலைகல், மின்சார வேலைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும். எனவும் அவர் மேலும் அங்கு கருத்து தெரிவித்தார். 

இந்நிகழ்வின் போது முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் உதவி தவிசாளர் நபீல் அமானுள்ளா, அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொருப்பதிகாரி ஜமில், அஸ்ரப் நகர் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பள்ளிவாயல் முக்கியஸ்தர்கள், இளைஞர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -