நல்லாட்சி தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் அன்வர் காட்டம்..!


18.01.2017 (புதன் ) பி.ப.2.00 மணியளவில் 2017 ம் ஆண்டிற்கான திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் மாவட்ட செயலாளர் புஸ்பகுமார தலைமையில் இடம்பெற்றது

கூட்டத்தில் இணை தலைவர்களான எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன்,பாராளுமன்ற உறுப்பினர்களான அப்துல்லாஹ் மஹ்ரூப்,துரைரத்தினம்,எம்.எஸ்.தௌபீக்,இம்ரான் மஹ்ரூப் மற்றும் பிரதி அமைச்சர் சுசந்த புஞ்சி நிலமே,மாகாண அமைச்சர் ஆரியவதி,உட்பட மாகாண சபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்

கூட்டத்தின் போது கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம்.அன்வரினால் கேற்கப்பட்ட கேள்விகள்

புல்மோட்டை 14 ம் கட்டை பகுதியில் சட்டவிரோத குடியேற்றங்கள்,இல்ங்கை இராணுவப் படையினரால் கையகபடுத்தப்பட்டுள்ள சுமார் 50 ஏக்கர் காணிகள் இன்னும் விடுவிக்கப்படாது குறித்து கடந்த மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது தொடர்பாக அரசாங்க அதிபரால் பாதுகாப்பு அமைச்சிற்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட்டதா

மேலும் 18.01.2017 ம் புதன் புல்மோட்டை பிரதேசத்திலுள்ள அரசாங்க ஊழியர்களுக்கான அரசின் புதிய கொள்கைக்கமைவாக அமைக்கபடவுள்ள வீட்டுத்திற்க்கான காணிகளை சுத்தம் செய்யும்போது வன பரிபாலன திணைக்கள அதிகாரிகள் உடன் சென்று நிறுத்தியது தொடர்பில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் அன்வரால் கேள்வி எழுப்ப பட்டபோது அனுமதி பெறப்படவில்லை என்றும் சொற்ப நேரத்திற்கு முன்னாடியே குச்சவெளி பிரதேச செயலாளரால் தெரிவிக்கப்பட்டதாகவும் மாவட்ட வன பரிபாலன அதிகாரியால் கூறியதை அடுத்து

அன்வர் மாவட்ட வன பரிபாலன அதிகாரியை நோக்கி புல்மோட்டை பிரதேசத்தில் குறித்த அதே பகுதியில் இயந்திரம் கொண்டு சிலரால் குறிப்பாக பௌத்த பிக்குவினால் சுத்தம் படுத்தும் போது விசேடமாக அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கும் தெரிவித்தும் இன்னும் தாங்கள் நடவடிக்கை எடுக்காது குறித்து மூவரிடமும் அன்வர் சட்டமும் ஒழுங்கும் சாதாரண குடி மகனுக்கே 
திணிக்கப்படுவதாகவும் நாட்டில் சிலருக்கு மாத்திரம் சுதந்திரமாக குற்றங்களை செய்வதற்கு அனுமதிப்பதாகவும் குற்றம் சாட்டினார் சாதாரண குடி மகன் அவ்வாறு செய்தால் உடன் போலீசார் நடவடிக்கை எடுத்து நீதிமன்றில் ஆஜர் படுத்துவர் சட்ட விரோத காணி பௌத்த பிக்குவினால் சுத்தம் செய்யப்பட்ட போது கிராம சேவகரால் புல்மோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டும் ஏன் என்னும் நடவடிக்கை எடுக்க பொலிஸார் தவறியது என மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியை நோக்கி அன்வர் கேள்வி எழுப்பினார்

பதில் அளித்த அரசாங்க அதிபர் உடன் பொலிஸாரை கொண்டு தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் பொலிசார் குறித்த பகுதிக்கு செல்லும் வேளையில் சுத்தம் செய்யும் இயந்திரத்தை கொண்டு மறைப்பதாகவும் அரசாங்க அதிபர் பதில் அளிக்கையில் மாகாண சபை உறுப்பினர் அன்வர் அவை என்ன சிறிய பொருளா மறைப்பதற்கு சாதாரண குடிமகன் அவ்வாறு செய்தால் அவர்களுடைய வீட்டிற்குள் சென்று பொலிசாரால் இயந்திரத்தை கைது செய்ய முடியுமாக இருந்தால் ஏன் இந்த சட்டம் செய்ய முடியாது என கேள்விகள் எழுப்பினார்

அத்தோடு இந்த நல்லாட்சியை குழப்பவே மஹ சோன பலகாய வைச் சேர்ந்த அமித் வீர சிங்க என்பவன் புல்மோட்டை பிரதேசத்திற்கு வருகை தந்து புல்மோட்டை பிரதேச முஸ்லிம்கள் சிங்க பெரும்பான்மை மக்களுடைய காணிகளை அபகரித்திருப்பதாக முக நூலினூடாக பொய் பிரச்சாரம் செய்வது தொடர்பில் ஏன் குறித்த நபரை பொலிசாரால் கைது செய்ய முடியாது எனவும் மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியை நோக்கி கேள்வி எழுப்பினார்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -