மாவட்டத்தில் முதலிடங்களை பெற்ற மாணவர்கள் காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தினால் கௌரவிப்பு-படங்கள்.

பழுலுல்லாஹ் பர்ஹான்-

ட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் 2016 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானம் ,வர்த்தகம்,பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடங்களை பெற்ற காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 08-01-2017 நேற்று ஞாயிற்றுக்கிழமை காத்தான்குடி-01 அஷ் -ஷூஹதா வீதியில் அமைந்துள்ள ஹோப் சென்டரில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஊடகவியலாளர் மன்றத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் தலைமையில் இடம்பெற்ற மேற்படி கௌரவிப்;பு நிகழ்வில் பிரதம அதிதியாக காத்தான்குடி பிரதேச கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம்.பதுர்தீன் கலந்து கொண்டதோடு கௌரவ அதிதிகளாக காத்தான்குடி நகர சபை செயலாளர் எஸ்.எம்.எம்.சபி, காத்தான்குடி பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஆர்.ஜி.துஷார திலங்க ஜெயலால்,பெண்களுக்கும் வலுவுட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் தலைவியும்,முன்னாள் நகர சபை உறுப்பினருமான சல்மா அமீர் ஹம்ஸா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் போது அதிதிகளினால் 2016 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் உயிரியல் விஞ்ஞானம் பிரிவில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற காத்தான்குடி மீரா பாலிகா தேசிய பாடசாலை மாணவி முஹம்மத் ஜிப்ரி பாத்திமா றிஸ்மா,வர்த்தகம்,பொறியியல் தொழில்நுட்பம் பிரிவுகளில் மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை மாணவர்களான சரிபுதீன் அப்துர் ரஹ்மான்,அன்ஸார் முஹம்மத் அம்ரித் ஆகியோர் அதிதிகளினால் மாலை போடப்பட்டு பதக்கமும்,பரிசில்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இங்கு உயிரியல் விஞ்ஞானம் ,வர்த்தகம்,பொறியியல் தொழில்நுட்பம் ஆகிய பிரிவுகளில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலிடங்களைப் பெற்று காத்தான்குடி பிரதேசத்திற்கு பெருமை சேர்த்த மாணவர்களை உருவாக்கிய காத்தான்குடி மீரா பாலிகா தேசியப் பாடசாலை, காத்தான்குடி மத்திய கல்லூரி தேசியப் பாடசாலை ஆகிவற்றின் அதிபர்களான எம்.சீ.எம். சத்தார், எஸ்.எச்.பிர்தௌஸ்ஆகியோர் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

2016 கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில் முதலிடங்களை பெற்ற காத்தான்குடி பிரதேச மாணவர்களை முதற்தடவையாக கௌரவிக்கும் குறித்த நிகழ்வில் பரீட் பவுண்டேஷனின் பணிப்பாளர் கே.எல்.எம்.பரீட் ஜேபி, மட்டக்களப்பு முஸ்லிம் வர்த்தகர் நலன்புரி சங்கத்தின் தலைவர் கே. எம். எம். கலீல், ஆர்.ஜி.எப்.நிறுவனத்தின் முகாiமாளர் ஏ.எஸ்.எம்.முஹீத், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ்,காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அத்தியட்சகர் டாக்டர் எம்.எஸ்.எம்.ஜாபீர்,இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வின் இணைப்புச் செயலாளர் முஹம்மட் றுஸ்வின், சமூக மதிப்பீட்டுக்கான அமைப்பின் தலைவர் இல்மி அஹமட் லெவ்வை ,காத்தான்குடி மத்தியஸ்த சபையின் தவிசாளர் எம்.ஐ.எம்.உஸனார்,காத்தான்குடி மின்சார சபையின் அத்தியட்சகர் எம்.சீ.எம்.நௌபல்,புதிய காத்தான்குடி சமுர்த்தி வங்கி முகாமையாளர் சுல்மி உட்பட ஊர்பிரமுகர்கள்,கல்வியலாளர்கள் ,மாணவர்களின் பெற்றோர்கள் உட்பட காத்தான்குடி ஊடகவியலாளர் ஒன்றியத்தின் செயலாளர் எம்.ஏ.சீ.ம்.ஜெலீஸ் அதன் பொருளாளர் பழுலுல்லாஹ் பாஸூல் பர்ஹான்,நிருவாக உறுப்பினர்களாக ஜூனைட் எம் பஹத்,அப்துல் கையூம் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -