"பாராளுமன்றம் வந்த கைதி விமல் அவமானப்பட்டார்"

மகிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் இடம் பெற்ற வாகன முறைக்கேடு தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவிற்கு எதிர் வரும் 7ஆம் திகதி வரை விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

எனினும் இன்றைய தினம் நீதிமன்றத்தில் விஷேட அனுமதி பெற்று பாராளுமன்றத்திற்கு விமல் வருகைத் தந்திருந்தார். எனினும் பாராளுமன்றத்தில் அவருக்கு அவமான நிலை ஏற்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் அவர் உரையாற்றும் போது ஆளும் கட்சி உறுப்பினர்களால் “வாகனத் திருடன்” என பாராளுமன்றத்தில் கூச்சல் எழுப்பினர். அதேபோன்று பல உறுப்பினர்கள் “வாகனத் திருடன் இன்னுமோர் திருட்டைப்பற்றி பேசுகின்றார், அவரைப் பிடித்து சிறையில் அடையுங்கள்” எனவும் கூச்சல் எழுப்பினர்.

அதனைத் தொடர்ந்து விமல் வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும் காரணத்தினால் அவதூறாக பேச வேண்டாம் என கேட்டுக்கொண்டார். என்றாலும் அதனை செவிமெடுக்காத ஆளும் கட்சி தரப்பு உறுப்பினர் ஒருவர் உச்சகட்டமாக விமலுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் நோக்கில் “விமலா.. வானகத் திருட்டு விமலா..., சிறையில் இருக்க வேண்டிய நீ எப்படி இங்கே வந்தாய்” என கூச்சலிட்டார்.

அதனைத் தொடர்ந்து ஆத்திரமடைந்த விமல் எனது வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் உள்ளது பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டாம் என கூறுங்கள் என்று சபாநாயகரிடம் கேட்டுக் கொண்டார்.

அதனை செவிமெடுத்த சபாநாயகர் “அவரும் ஓர் பாராளுமன்ற உறுப்பினர் அதனால் பெயர்களை பாவித்து அவதூறு செய்யும் வகையில் உரையாற்ற வேண்டாம் என தெரிவித்தார். எவ்வாறாயினும் இன்று விமல் வீரவங்சவின் வருகையால் பாராளுமன்றம் கூச்சலும் குழப்பமுமாக காணப்பட்டதோடு, விமலுக்கு இது உச்சகட்ட அவமான நிலை எனவும் கூறப்படுகின்றது.

அதேபோன்று கூட்டு எதிர்க்கட்சி தரப்பினர் அரசுக்கும், பிரதமருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை முன்வைத்து கூச்சல் எழுப்பி சபையை குழப்பும் விதமாகவும் நடந்து கொண்டனர். இதேவேளை அண்மையில் வயாகரா என்ற பெயரினால் விமலுக்கு பாராளுமன்றத்தில் அவமான நிலை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -