வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே வேலையினால் உயிரிளந்த நபர் பரிதாபம்

ணிக்கு சுமார் 120 கிலோ மீற்றர் வேகத்தில் சென்ற பி.எம்.டபிள்யு. கார் ஒன்று ஊபர் வாடகைக் கார் மீது மோதியதில், வாடகைக் காரை ஓட்டிச் சென்ற சாரதி சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். இச்சம்பவம் நேற்று முன்தினம் ஞாயிறன்று இரவு டெல்லியில் இடம்பெற்றுள்ளது.

சொஹைப் கோலி (24) என்பவர் பன்னாட்டு நிறுவனம் ஒன்றின் அதிகாரி. இவர் கடந்த ஞாயிறன்று இரவு தனது பி.எம்.டபிள்யூ. ரகக் காரில் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுகொண்டிருந்தார்.

டெல்லியின் மையப் பகுதியில் கோலி சென்றுகொண்டிருந்தபோது, முன்னால் சென்றுகொண்டிருந்த ஊபர் வாடகைக் கார் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கியெறியப்பட்ட கார் சில அடி தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்ட பின்பே நின்றது. மோதிய வேகத்திலேயே, குறித்த வாடகைக் காரைச் செலுத்திச் சென்ற நஸ்ருல் இஸ்லாம் (30) என்பவர் உடல் நசுங்கி பலியானார்.

நஸ்ருலின் வருமானத்தை நம்பியே அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் பாட்டி ஆகியோர் வாழ்ந்து வருகின்றனர். அண்மையில் தனது வேலையை இழந்த இவர், ஊபர் நிறுவனத்தில் சம்பவ தினத்தன்று காலையே வேலைக்குச் சேர்ந்திருந்தார்.

விபத்தையடுத்து கோலி தப்பிச் சென்றபோதும், நேற்று தனது தந்தையுடன் பொலிஸில் ஆஜரானார்.

கோலியின் மீதான பொலிஸ் விசாரணையின்போது, மது அருந்திவிட்டு வாகனத்தைச் செலுத்தவில்லை என்று கூறிய கோலி அதீத வேகத்தில் சென்றதை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், முன்னால் சென்ற கார் திடீரென்று நிறுத்தப்பட்டதனாலேயே விபத்து சம்பவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். விசாரணை தொடர்கிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -