பாறுக் ஷிஹான்-
கிளிநொச்சியில் இந்து ஆரம்ப பாடசாலையில் தரம் 1ல் இருந்து 5வரை கல்வி பயின்ற மாணவிக்கு தரம் 6ல் கல்வியினை தொடர கிளி இந்துக் கல்லூரியில் அதிபரால்அனுமதி வழங்கப்படவில்லை.
பெற்றோர் மற்றும் அவர்களின் நண்பர்கள் தொடர்சியான முயற்சிகள் மேற்கொண்டும், வலயக்கல்விப் பணிப்பாளரால் உடன் சேர்த்துக் கொள்ளுமாறு கடிதம் வழங்கியும் குறத்த மாணவி பாடசாலையில் கல்விபயில இது வரை அனுமதிக்கப்படவில்லை.
இதனால் குறித்த மாணவி 1ம் தவனை கல்வியினை தொடர முடியாதுள்ளது. குறித்த மாணவி மிகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவள். தந்தையார் தினக் கூலிக்கு வேலை செய்வதனால் பாரிய கஸ்டத்தில் உள்ளமையினால் தனது மகள் இதுவரை படித்தது காணும் என்கிற எண்ணத்திற்கும் இவ் அதிபரின் செயற்பாடு அமைந்துவிட்டது.
இப் பிள்ளை அப் பாடசாலையில் கல்வியினை தொடர வைப்பதில் தாயார் படாதபாடாய் பாடுபட்டுக் கொண்டு வருகிறார். எனவே குறித்த மாணவியை அவரது பாடசாலையில் கல்வியைத் தொடர எவராவது முயற்சி செய்ய வேண்டாமா..?
