உயிர் கொல்லி டெங்கு நோயிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாப்போம்

எஸ்.அஷ்ரப்கான்-

யிர் கொல்லி டெங்கு நோயிலிருந்து தன்னையும் தனது குடும்பத்தையும் பாதுகாக்க சூழலை சுத்தமாக வைத்திருக்க முனைய வேண்டும் என நாபீர் பெளண்டேசன் ஸ்தாபகத் தலைவரும் பொறியியலாளருமான யு.கே. நாபீர் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில் டெங்கு காய்ச்சல் காரணமாக பல உயிரிழப்புக்களும் பல்வேறு அசெளகரியங்களும் ஏற்பட்டு வரும் நிலையில் பிரதேச மக்களை விழிப்பூட்டும் அடிப்படையில் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கடந்த வருடம் இலங்கையில் 50 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகளவில் 10 மாவட்டங்கள் டெங்கினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் அம்பாறை மாவட்டம் 10வது இடத்திலுள்ளது.

கல்முனை சுகாதார சேவைகள் பணிமனை வலயத்தின் கீழுள்ள பிரதேசங்களில் 3 பேர் டெங்கு காய்ச்சல் தாக்கத்துக்குள்ளாகி மரணமடைந்துள்ளனர். இதேபோல் அம்பாறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் கீழுள்ள பிரதேசத்தில் 2 பேரும் உயிரிழந்துள்ளனர்.

ஆகக் குறைந்த டெங்கு காய்ச்சல் தாக்கத்துக்குள்ளான மாவட்டமாக அம்பாறை மாவட்டம் உள்ளடக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

கல்முனை தெற்கு, சாய்ந்தமருது போன்ற பிரதேசங்களில் டெங்கு நோய் தாக்கம் அதிகமுள்ளது. அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டாலும் எமது மக்கள் தமது ஒத்துழைப்பை பூரணமாக வழங்க முன் வர வேண்டும்.

சுகாதாரத்துறை மாத்திரம் உதவி செய்து பூரணமாக டெங்கை கட்டுப்படுத்த முடியாது. ஒவ்வொரு தனி நபரும் ஒத்துழைத்தால் தான் இதனை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கட்டுப்படுத்த முடியும்.

இதற்கான சிறந்த வேலைத்திட்டத்தை எமது அமைப்பின் சுகாதாரப் பிரிவு மேற்கொண்டு வருகின்றது. அந்த அடிப்படையில் எதிர்காலத்தில் தமது பிள்ளைச் செல்வங்களை கொடிய டெங்கிலிருந்து பாதுகாத்து சுகாதார மேம்பாட்டுக்கு உதவ முன்வருமாறு பிரதேச மக்களை கேட்டுக் கொள்கின்றேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -