தேசியப்பட்டியல் அழுதுதங்களைக் கொடுப்போம் ஆவேசங்களைக் கைவிடுவோம்- இக்பால்

கோசங்கள் மூலமும் ஆக்ரோசங்கள் மூலம் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெற முனைவது கௌரவமானதொன்றல்ல. இவ்வாறு அட்டாளைச்சேனை முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் இக்பால் எம் யூசுப் தெரிவித்துள்ளார். 
இன்று ஊடகங்களுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கும் சர்ச்சைக்குரிய அட்டாளைச்சேனைப் பிரதேச ஸ்ரீ.ல.மு.காவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பிரிமை குறித்து கருத்துத் தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும தெரிவிக்கையில்:

அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான ஸ்ரீ.ல.மு.காவின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை இதுவரை நழுவலுக்கான காரணம்,அன்று தொட்டு இன்றுவரை,கட்சியின் அட்டாளைச்சேனை பிரமுகர்கள் மத்தியில் ஏகோபித்த கருத்தொற்றுமை இன்மையாகும்.

எவ்வாறாயினும்,தலைமத்துவம் யாருக்காவது வழங்கி அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்குக் கொடுத்த வாக்குறுதியை காப்பாற்ற கேண்டிய அழுத்தங்கள் மேலோங்கியுள்ளது.

இவ்வாறிருக்கையில்,
சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியையும் அதன் தலைமத்துவத்தையும் பணயக்கைதியாக்கியோ அல்லது நிர்பந்தித்தோ அல்லது அச்சுறுத்தியோ அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்கான தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை.அதனை கௌரவமாக வழங்க வேண்டிய தார்மீகக் கடமை கட்சிக்கும் அதன்் தலைமத்துவத்துக்கும் உண்டு.

அழுத்தங்கள் கொடுக்கப்படலாம்.ஆனால்,ஆக்ரோசங்களை கோசங்களையும் வெளிப்படுத்தி அதனை வென்றெடுக்க வேண்டிய தேவைப்பாடு இல்லை.அட்டாளைச்சேனைப்பிரதேச தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி குறித்து அனைத்தப் பள்ளிவாசல் சம்மேளனத்தினாலும்,கட்சியின் உயர் பீட உறுப்பினர்களாலும்,போராளிகளாலும் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.முடிவு எடுக்கவேண்டிய பொறுப்பும் தலைமத்துவத்திடம் வழங்கப்பட்டிருக்கின்ற வேளையில்,கட்சியின் போராளிகளும்,ஆதரவாளர்களும்,அபிமானிகளும் பொறுமை காக்க வேண்டுமே தவிர அவசரப்பட்டு மாற்று நடவடிக்கைகளை மேற் கொண்டு பா.உ.பதவியைப் பெற நினைப்பது அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் வரலாற்றுப் பதிவாகிவிடக் கூடாது.

அத்தனை அழுத்தங்களையும் தாண்டி, விட்டுக்கொடுப்பு மனப்பான்மையுடன் செயலாளர் நாயகம் ஹசனலி அவர்களுக்கு பா.உ.பதவி கொடுத்துத்தான் இந்தக்கட்சியைக் காப்பாற்ற வேண்டும் என்ற முடிவுக்கு தலைவர் வந்தால்,கட்சியைக்காப்பாற்றிய வரலாற்றையும் அட்டாளைச்சேனைப்பிரதேசம் பெற்றுக்கொள்ளும்.

அவ்வாறு,வழங்கப்படுமாக இருந்தால்,செயலாளர் நாயகம் ஹசனலி அவர்கள் விட்டுக்கொடுப்பைச் செய்தால் மாத்திரமே தற்போது அட்டாளைச்சேனைப்பிர தேசம் பா.உ.பதவியைப் பெற்றுக்கொள்ள முடியும்.கட்சியின் தலைமத்துவம் வாக்குறுதி வழங்கினால் அதனை நிறைவேற்ற வேண்டிய தார்மீகப் பொறுப்பு செயலாளருக்கும் உண்டு.அதிலிருந்து அவர் விலகி விடமுடியாது.அட்டாளைச்சேனப் பிரதேச கட்சியின் போராளிகளின் அபிலாசைகளையும்,உணர்வுகளையும்,அட்டாளைச்சேனை அனைத்துப்பள்ளிவாசல் தீர்மானத்தையும் விட அவருக்குத்தான் அந்தப் பதவி அவசியமென செயலாளர் நாயகம் விரும்புவாரேயனால்
அதுவும் ஒரு வரலாற்றுப் பதிவைக் கொண்டுவரும் என அவர் நினைக்க வேண்டும்.

கட்சியின் நலன் கருதியும்,அட்டாளைச்சேனைப் பிரதேச கட்சிப் போராளிகள் நலன் கருதியும் அவர்களின் உணர்ஙுகள் கருதியும் விட்டுக் கொடுப்பைச் செய்யுமாறு இணையத்தளம் ஊடாக செயலாளர் நாயகத்துக்கு நான் பகிரங்க மடல் எழுதியுள்ளமை பற்றி போராளிகள் அறிவார்கள்
அனைத்தையும் புறந்தள்ளிவிட்டு,செயலாளர் நாயகம் பா.உ.பதவியைப் பெறுவாரேயானால் அட்டாளைச்சேனைப் பிரதேச போராளிகள் விட்டுக் கொடுக்கும் நிலைக்கு மாறவேண்டும்
அவர் விட்டுக் கொடுப்பைச் செய்ய முன் வராதபோது,மனித நேயத்துடனும்,மனிதபிமானத்துடனும் போராளிகள நடந்து கொள்வதே புத்திசாதுர்யமாகும்.

இவுவாறிருக்கையில், காலம் தாமதித்தாலும் அட்டாளைச்சேனைப் பிரதேசத்துக்குக் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப் படுமென தலைவர் திட்டமாகக் கூறியிருக்கின்றார்.ஆகவே,கௌரவமான அந்தப் பா.உ.பதவியை கௌரவத்துடன் பெற்றுக் கொள்வோம்.அதுவரை,பொறுமை காப்பது போராளிகளின் கடமையாகும் எனத் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -