சாய்ந்தமருதில் விபத்துக்குள்ளான குடும்பத்தினரின் அவசர வேண்டுகோள்..!

சாய்ந்தமருதில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூன்று குழந்தைகள் மரணம் அடைந்துள்ளதுடன் ஏனையோர் கல்முனை அஸ்ரப் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து பாலமுனை நோக்கி வந்த வேன் அக்கரைப்பற்று டிப்போ பஸ்ஸூடன் மோதிய போதே இவ் விபத்து நடந்துள்ளது.

பெண்கள் உட்பட 10ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.! மரண எண்ணிக்கை அதிகரிக்கலாமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது.!

இடம்பெற்ற கோரமான வாகன விபத்தில் உயிரிழந்த சிறுவர்கள் மற்றும் படுகாயமடைந்த பெண்கள் இரத்த வெள்ளத்தில் கோரமாக கிடக்கும் புகைப்படங்களை சிலர் வட்ஸ்சப் மற்றும் முகப்புத்தகங்களில் பதிவேற்றம் செய்துள்ளனர்.

இது, சம்மந்தப்பட்ட குடும்ப உறவினர்களுக்கு பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிப்பதுடன் அவற்றை அல்லாஹ்வுக்காக உடனடியாக அகற்றுமாறு சம்மந்தப்பட்டவர்களிடம் கேட்டுக்கொள்வதாக அவர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

நமது குழந்தை, நமது தாய், நமது சகோதரி எவருக்காவது இப்படியொரு நிலைமை ஏற்பட்டால் உடல் சிதைந்து- இரத்த வெள்ளத்தில் கோரமாக நடு வீதியில் கிடந்தால் அதனை நாம் புகைப்படம் எடுத்து காட்சிப்படுத்துவோமா...?

இப்படியான புகைப்படங்களை பத்திரிகை மற்றும் இலத்திரனியல் ஊடகங்களில் வெளியிடுவது தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் சமூக வலைத்தளங்களில் அவரவர் எதை வேண்டுமானாலும் போடலாம் என்கிற நிலை காணப்படுகிறது. இந்த சிந்தனை நம்மவரிடத்தில் மாற வேண்டும். 

இவ்வேண்டுகோளை மதித்து நாமும் அவர்களுக்கு உதவும் முகமாக இத்தகவலை அதிகம் சேர் செய்து குறித்த புகைப்படத்தினை நீக்குவதற்கு உதவுவோம்.

முந்திய செய்திக்கு இங்கே click செய்யவும்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -