நிந்தவூரில் மாயமான முறையில் இடம்பெற்ற விபத்து..!

சுலைமான் றாபி-
ம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட நிந்தவூர் பிரதேசத்தில் நேற்று இரவு (26) மோட்டார் சைக்கிள் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.

EP BEF 3971 எனும் இலக்கம் கொண்ட கறுப்பு நிற பல்சர் மோட்டார் சைக்கிள் நிந்தவூர் பிரதான வீதி களியோடைப் பாலம் அமைந்துள்ள பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியதோடு, இந்த மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் யார் யார் என்பதும், இந்த விபத்து சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பது பற்றி அறிய முடியாதுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை பிரதான வீதியிலிருந்து ஐந்தடி பள்ளத்திலுள்ள மின்கம்பம் மற்றும் வேம்பு மரத்திற்கிடையில் மோட்டார் சைக்கிள் சிக்கி பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளதோடு, வாகனத்தினை செலுத்தியவர்கள் பற்றி அறிய முடியாதுள்ளதாகவும், குறித்த விபத்து சம்பந்தமான விரிவான விசாரணைகள் முடக்கி விடப்பட்டுள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பொலிஸார் தெரிவித்தனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -