சம்மாந்துறை மையவாடி மலைப் பிரதேசத்தை தொல்பொருள் வலயமாக்க முயற்சி - நாபீர்

எஸ்.அஷ்ரப்கான்-
ம்மாந்துறை மையவாடியை அண்மித்த மலைப் பிரதேசத்தை தொல்பொருள் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தும் முயற்சியில் தொல்பொருள் திணைக்களம் ஈடுபட்டு குறித்த இடத்தை அடையாளப்படுத்தி முற்கம்பி வேலி இடப்பட்டிருக்கின்றது. இது இப்பிரதேசத்தில் சுமார் ஐம்பது வருடத்திற்கு மேலாக தொடர்ந்தேச்சியாக வாழும் இரண்டாயிரம் குடும்பங்களையும், அவ்விடத்தில் அமைந்துள்ள பள்ளிவாசலையும் நெருக்குவாரத்துக்கு உட்படுத்தும் செயற்றிட்டமாகும். என நாபீர் பௌண்டேசனின் தலைவரும், அரசியற் செயற்பாட்டாளரும், சமூக செயற்பாட்டாளருமான யூ.கே.நாபீர் தெரிவித்தார்.

முஸ்லிம் பிரதேசமான சம்மாந்துறை பகுதியில் தொல்பொருள் என்ற கோணத்தில் பிரதேசங்களை கையகப்படுத்தும் தொல்பொருள் திணைக்களத்தின் அநீதி குறித்து ஊடகங்களுக்கு விடுத்திருக்கும் அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவ்வறிக்கையில் தொடர்ந்தும் குறிப்பிட்டிருப்பதாவது;

சிங்கள – பௌத்த பேரினவாத ஆதிக்க சக்திகள் முஸ்லிம் பிரதேசங்களை இல்லாமற் செய்யும் இந்நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே சம்மாந்துறை மக்கள் இதனைப் பார்க்கின்றனர். சம்மாந்துறை பிரதேசத்தை உள்ளடக்கிய நமது அம்பாறை மாவட்ட அரசியல் களத்தில் முஸ்லிம் மக்களின் அதிஉச்ச ஆணையைப் பெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாண சபை உறுப்பினர்களும் இது விடயத்தில் அதிக பொறுப்புடையவர்களாக உள்ளனர். நல்லாட்சி அரசாங்கம் முஸ்லிம்களை பாதுகாக்கக் கூடியதென்ற கோச முன்னெடுப்போடு இம்மக்களின் வாக்குகளை சுவீகரித்து அரசியல் அதிகாரத்தை சுவைத்துக் கொண்டிருக்கும் இவர்களின் பிற்போக்குத் தனத்தினால் அம்பாறை முஸ்லிம் பிரதேசமெல்லாம் சிங்கள மயப்படுவதற்கு துணையாகி வருகின்றனர்.

இத்தகைய கோணத்தில் பார்க்கின்ற போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தற்போதைய அரசாங்கத்திற்கு சோரம் போனவர்கள் என்பது வெளிப்படையானது. இம்மாவட்ட மக்களின் வாக்குகளை இரண்டாவது இடத்தில் கபளிகரம் செய்துகொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியல் முக்கியஸ்த்தர்களும் குறிப்பாக இக்கட்சியின் சம்மாந்துறை பிரமுகர்களும் அதிக பொறுப்புடையவர்களாக உள்ளனர்.

இவ்வாறு பொறுப்புடன் செயற்பட வேண்டிய அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றுமறியாதவர்கள் போல் மௌனம் சாதித்து பதுங்கிக் கொண்டிருப்பது அவர்களின் கையாலாகா தன்மையைப் பறை சாற்றிக்கொண்டிருகின்றது.

மக்கள் பிரதிநிதிகள், அரசியல் பிரமுகர்கள் என்பவர்களை மக்கள் ஆதரித்தி நிற்பதென்பது வெறும் அபிவிருத்திகளை அடைந்து கொள்வதற்காக அல்ல. மாறாக மக்களும் சமூகமும் பாதிக்கப்படுகின்ற போது அதுகுறித்து கவனம் செலுத்தி தேவையான மாற்று வழிகளை தேடி மக்களை அச்சமற்று வாழச் செய்வதற்கு உதவ வேண்டும். இவ்வாறு செய்வதற்கு வக்கற்றவர்களை மீண்டும் மீண்டும் நமது மக்கள் நமது பிரதிநிதிகளாகவும், நமது அரசியல் செயற்பாட்டாளர்களாகவும் தொடர்ந்து வைத்திருக்கும் தவறை நாம் செய்து கொண்டிருப்பதனால்தான் நமது எந்த நெருக்குவாரங்களிலிருந்தும் விடுதலை பெற முடியாது அதற்குள் நொருங்கிக்கொண்டிருப்பதன் தாத்பரியமாகும்.

நமது சம்மாந்துறை மக்கள் நமக்காக இன்றிருக்கின்ற நமது பிரதிநிதிகளை உலுக்கிக் கேள்வி கேட்கின்ற சமூகமாக மாற வேண்டும். அல்லாஹ் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத துணிச்சல்மிக்க,துடிப்புள்ள புதிய முகங்களை நமக்கான அரசியல் செயற்பாட்டுக்குரியவர்களாக அடையாளம் கண்டு மக்களே தமக்கான பிரதிநிதிகளை அடையாளப்படுத்துகின்ற சூழலை நாம் ஏற்படுத்தாதவரை நாம் இப்படித்தான் படிப்படியாக சொந்த நிலங்களையும், சுயத்தையும் இழந்து பரதேசிகளாக மாறுவதிலிருந்து விடிவு கிட்டாது.”

அல்லாஹ் தவிர வேறு யாருக்கும் அஞ்சாத துணிச்சல்மிக்க, துடிப்புள்ள புதிய முகங்களை நமக்கான அரசியல் செயற்பாட்டுக்குரியவர்களாக அடையாளம் கண்டு மக்களே தமக்கான பிரதிநிதிகளை அடையாளப்படுத்துகின்ற சூழலை நாம் ஏற்படுத்தாதவரை நாம் இப்படித்தான் படிப்படியாக சொந்த நிலங்களையும், சுயத்தையும் இழந்து பரதேசிகளாக மாறுவதிலிருந்து விடிவு கிட்டாது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -