இலங்கை போக்கு வரத்துக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்து விழுந்த மூதாட்டி கவலைக்கிடம்

அப்துல்சலாம் யாசீம்-

யாழ்பாணத்திலிருந்து திருகோணமலை நோக்கி வந்த இலங்கை போக்கு வரத்துக்கு சொந்தமான பஸ்ஸிலிருந்து மூதாட்டி விழுந்து மயக்க முற்ற நிலையில் பஸ்ஸின் சாரதியும் நடாத்துனரையும் இன்று (09) பிற்பகல் 12.30மணியளவில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மயிலகுடாவ பகுதியிலிருந்து மொறவெவ பிரதேச செயலகத்திற்கு வீட்டுக்கு அருகிலுள்ள மரத்தை வெட்டுவதற்காக உறுதிப்பத்திரத்தை பெற்றுக்கொள்ள வந்தபோதே பஸ்ஸை நிறுத்த முன்னர் இறங்க முற்பட்டதையடுத்தே இவ்விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவருகின்றது.

இவ்விபத்தில் மஹதிவுல்வெவ.தெவனிபியவர பகுதியைச்சேர்ந்த பீ.பிசோமெனிகே (70) எனவும் தெரியவருகின்றது.

குறித்த விபத்தில் வயோதிபரின் தலைப்பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதுடன் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் வயோதிபரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்விபத்து தொடர்பாக மொறவெவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -