அமைச்சர் மஹிந்த அமரவீர பதவி துறக்குகிறார்..?

மீன்பிடித்துறை அமைச்சர் பதவியை துறக்கத் தீர்மானித்துள்ளதாக சிங்கள நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அமைச்சர் மஹிந்த அமரவீர தமது பதவியை ராஜினாமா செய்வதாக ஊகம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மஹிந்த அமரவீர ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் அமைச்சில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது இது பற்றிய ஊகத்தை அவர் வெளியிட்டுள்ளார்.

“நான் மீன்பிடித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய உள்ளேன். எனக்கு தொடர்ந்தும் அமைச்சில் பதவி வகிக்க முடியாது. அமைச்சின் சில அதிகாரிகளுடன் என்னால் தொடர்ந்தும் பணியாற்ற முடியாது. பணிகளை ஆற்றக்கூடிய வகையில் அவர்களின் ஒத்துழைப்பு கிடைப்பதில்லை. எனக்கு சேவையாற்ற வேறும் ஓர் அமைச்சினை தருமாறு ஜனாதிபதியிடம் கோர உள்ளேன். அவ்வாறு கிடைக்காவிட்டாலும் பராவாயில்லை.” என குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மீனவர்களின் வீடுகளை புனரமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நலன் திட்டங்களுக்காக 1300 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என அவர் தெரவித்துள்ளார்.

மீன்பிடித்துறை அமைச்சராக பணிகளை முன்னெடுக்குமாறு பிரதி அமைச்சர் திலிப் வெதாராச்சியிடம், அமைச்சர் மஹிந்த அமரவீர கோரியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -