பொதுமன்னிப்பின் அடிப்படையில் 6,500 இராணுவ வீரர்கள் சேவையிலிருந்து விலகியுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டில் இராணுவப்படையில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இராணுவச்சட்டங்களை மீறி தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் தப்பிச் சென்ற இராணுவ வீரர்களை முறையாக பதவியிலிருந்து நீக்குவதற்காக டிசம்பர் முதலாம் திகதி முதல் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த பொது மன்னிப்பு காலம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்திருந்தது.
இதனடிப்படையில், மூன்று மாத காலப்பகுதிக்குள் 6,500 பேர் பொது மன்னிப்பின் பேரில் சேவையிலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
