க.கிஷாந்தன்-திம்புள்ள – பத்தனை பகுதியில் மவுண்ட்வேர்ணன் தோட்டத்தில் இரண்டு பிரிவுகளில் இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட 50 குடியிருப்பாளர்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கான இடங்களை தோட்ட நிர்வாகத்திடமிருந்து பெற்றுக்கொண்டு மக்களுக்கு கையளிக்கும் நிகழ்வு 23.01.2017 அன்று நடைபெற்றது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொது செயலாளர் ஆறுமுகன் தொண்டமானின் முயற்சியினால் பெற்றுக்கொள்ளப்பட்ட இந்த இடங்களை காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான சக்திவேல், பிலிப்குமார், கணபதி கனகராஜ், முன்னால் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராஜதுரை என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டு பொது மக்களிடம் கையளித்தனர்.
பெற்றுக்கொள்ளப்பட்ட இடங்களில் எதிர்காலத்தில் வீடுகள் கட்டுவதற்கென வேலைத்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.



