ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசில் இருந்து தவிசாளர் பஷீர் சேகு தாவூத் உடனடி நீக்கம்..!

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பொத்துவிலிருந்து உடனடியாக தற்போது கொழும்பு திரும்பிக் கொண்டிருப்பதாக ஊர்ஜிதமான தகவல்கள் கிடைத்துள்ளன.

கட்சியின் தவிசாளர் பஷீர் ஷேகு தாவூத் வசந்தம் தொலைக் காட்சியின் அதிர்வு நிகழ்ச்சியில் தெரிவித்த பல கருத்துகள் கட்சி மட்டத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தியதனையடுத்தே அவர் உடனடியாக கொழும்பு திரும்பிக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பஷீர் ஷேகு தாவூதின் கட்சியின் உறுப்புரிமை முதல் தவிசாளர் பதவி வரை அனைத்தையும் தற்காலிகமாக இடைநிறுத்துமாறு கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள் தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதன் காரணமாக இது தொடர்பில் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இன்று அமைச்சர் ஹக்கீம் நாளை (30) அவசர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என்றும் அந்த வட்டாரங்க்ள என்னிடம் தெரிவித்தன.

கட்சியின் பேராளர் மாகாநாடு பெ்பரவரி மாதம் நடைபெறவுள்ள நிலையில் அதற்க முன்னராக பஷீர் ஷேகு தாவூதை கட்சியிலிருந்த இடைநிறுத்துமாறு கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் தற்போது கட்சி தலைமைக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -