பொத்துவில் களப்புக்கட்டு மீன் சந்தையினை கையளிக்கும் நிகழ்வு

அகமட் எஸ். முகைடீன், ஹாசீப் யாசீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமானசட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸின் நிதியொதுக்கீட்டில் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட பொத்துவில்களப்புக்கட்டு மீன் சந்தையினை மீனவர்களின் பாவனைக்கு கையளிக்கும் நிகழ்வு (30) வெள்ளிக்கிழமைநடைபெற்றது.

களப்புக் கட்டு கிராமிய மீனவர் சங்கத்தின் தலைவர் ஐ. பதியுத்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதிஅமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் கலந்து கொண்டு திறந்து வைத்தார்.

இதில் பொத்துவில் பிரதேச செயலாளர் என்.எம்.எம். முஷர்ரத், பொத்துவில் பிரதேச சபையின் முன்னாள்தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக், கரையோரம் பேணல் திணைக்களத்தின் அம்பாறை மாவட்ட திட்டஒருங்கிணைப்பாளர் சமிர பெரேரா, சுற்றுலா கைத்தொழில் சம்மேளனத்தின் தலைவரும் ஸ்ரீலங்காமுஸ்லிம் காங்கிரஸ் தலைவர் றவூப் ஹக்கீமின் பாராளுமன்ற செயலாளருமான ஏ.எம். ஜவ்பர், கல்முனைமாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் ஏ.ஏ. பசீர், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச்செயலாளர்களான நௌபர் ஏ. பாவா, கே.எம். தௌபீக், எம். ஹமீட் மற்றும் மீனவ சங்க பிரிதிநிதிகள்,பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

பொத்துவில் களப்புக்கட்டு பிரதேசத்தில் நன்னீர் மீன்பிடியினை மேற்கொள்ளும் மீனவர்களினால்பிடிக்கப்படும் மீன்களை சந்தைப்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட குறித்த கட்டடம் பாவனைக்குஉதவாத நிலையில் கடந்த பல வருடங்களாக காணப்பட்டது. இது தொடர்பாக களப்புக்கட்டு கிராமிய மீனவர்சங்கத்தினர் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர். அதனைத்தொடர்ந்து பிரதி அமைச்சரின் நிதி ஒதுக்கீட்டில் மேற்படி மீன் சந்தை புனர்நிர்மாணம் செய்யப்பட்டது.அதேவேளை இப்பிரதேசத்தில் உள்ள மீனவர்கள் ஓய்வறையும் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மக்கள்பாவனைக்கு பிரதி அமைச்சரினால் கையளிக்கப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -