பேருந்து ஒன்றுடன் மாட்டு பட்டுப்பட்டி மோதியதில் 5 மாடுகள் பலி 9மாடுகள் படுகாயம்

யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று (29) மாலையில் மொரட்டுவை நோக்கி புறப்பட்ட பேருந்து இரவு 9.30 மணியளவில் மாங்குளத்தைத் தாண்டி கொல்லர் புளியங்குளம் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்தவேளையில் ஏ9 வீதியில் திடீரென வீதியைக் கடந்த மாட்டு பட்டியின்மீது மோதியுள்ளதுது.

இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 9 பயணிகள் படுகாயமடைந்து மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் 05 மாடுகள் உயிரிழந்துள்ளதோடு 10 மாடுகள் படுகாயமடைந்த நிலையில் எழும்ப முடியாத நிலையில் வீதியில் வீழ்ந்து கிடந்தன.

இதனையடுத்து படுகாயமடைந்த மாடுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் படுகாயமடைந்த பயணிகளில் சிலர், மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தெடர்பாக மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.தினகரன்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -