அபு அலா, சப்னி அஹமட்-
திருகோணமலை மாவட்டம், மூதூர் - நீலப்பொல கங்குவேலி குடி நீர் வழங்கல் திட்டத்தை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகரத்திட்டமிடம் நீர்வ அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இன்று (13) ஆரம்பித்து வைத்தார்.
205 மில்லியன் ரூபா செலவில் அமையப்பெறவுள்ள இத்திட்டத்தின் மூலம் ஏறத்தாழ 40KM நீளமான நீர் குழாய்கள் பதிக்கப்பட்டு மூதூர் குடிநீர் விநியோகத்தில் இருந்து கங்குவேலி நீலப்பொல ஆகிய பகுதிகளுக்கு நீர் வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் மேலதிகமாக 1360 புதிய குடி நீர் இணைப்புக்களை வழங்க எதிர்பார்க்கப்படுகிறது.
மூதூர் பிரதேச செயலக வலயத்தினுள் உள்ள கங்குவேலி கிராம சேவகர் பிரிவு, சேருவில பிரதேச வலயத்தினுள் நீலப்பொல, சமகிபுர, சிவபுரம், தெகிவத்த, லிங்கபுரம், ஆரியம்மன் ஆகிய 07 கிராம சேவக பிரிவுகளில் உள்ள சுமார் 6767 மக்கள் இக்குடி நீர் திட்டத்தின் மூலம் பயனடையவுள்ளனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எஸ்.தௌபீக், துறைராஜசிங்கம், மாகாண அமைச்சர்களான ஏ.எல்.நஸீர், ஆரியகலபதி, மாகாணசபை உறுப்பினர்களான ஆர்.எம்.அன்வர், லாஹிர், தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்குப் பிராந்திய பொறுப்பாளர் பொறியியலாளர் ரஷீத் உட்பட அரசியல் பிரமுகர்கள், உயரதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.



