2017 இளைஞர் பாராளுமன்ற, முதலாவது அமர்வில் பிரதமர்..!



அஷ்ரப் ஏ சமத்-
ந்த நாட்டின் காலம் சென்ற முன்னால் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவா்த்தனவினால் 40 வருடங்களுக்கு முன் பாரிய, துரித அபிவிருத்தித் திட்டங்களை அன்று ஆரம்பித்தாா். ஆனால் 20-25 வருடகாலமாக எமது நாட்டில் நடைபெற்ற யுத்தம் காரணமாக நமது நாடு அபிவிருத்தியில் பின்னோக்கிச் சென்றது. ஆகவே தான் இந்த நாட்டின் ஆட்சியின் 70 ஆண்டுகள் சரித்திரத்தின் பின் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து இரண்டு பிரதான கட்சிகளுடன் இணைந்து ஆட்சியமைத்தோம். இந்த நாட்டின் இளைஞா்களின் எதிா்காலத்தினை கருத்திற் கொண்டோம். அவா்கள் பற்றி சிந்தித்தோம்.. என பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தாா்.

2017ஆம் ஆண்டிற்கு தெரிவு செய்யப்பட்ட 224 இளைஞா் பாராளுமன்ற உறுப்பிணா்களது இளைஞா் பாராளுமன்றத்தின் முதலாவது அமா்வு இன்று (25)ம் திகதி மகரகம இளைஞா் சேவை மன்றத்தில் உள்ள இளைஞா் பாராளுமன்றத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம மந்திரி ரணில் விக்கிரமசிங்க பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு இளைஞா் அமா்வில் பிரதான உரை நிகழ்த்தி அமா்வினை ஆரம்பித்து வைத்தாா். இதன்போது இளைஞா் சபாநாயகா், பிரதி சபாநாயகா், குழுக்கலின் பிரதித் தலைவா் போன்ற பதவிகள் சபையினால் தெரிவுசெய்யப்பட்டன.

இந் நிகழ்வில் நீதியமைச்சா் விஜயதாச ராஜபக்ச, பொருளாதார இளைஞா் இராஜாங்க அமைச்சா் நிரோசன் பெரோ, மற்றும் தேசிய இளைஞா் சேவை மண்றத்தின் தலைவா் வே.ஏராந்த வெலிககே, ஆகியோறும் கலந்து கொண்டனா்.

தொடா்ந்தும்  அங்கு உரையாற்றிய பிரதமந்திரி தெரிவித்தாவது -

இங்குள்ள இளைஞா் பாராளுமன்ற உறுப்பிணா்கள் இணைந்து இந்த நாட்டில் நாம் அனைவரும் ” இலங்கையா் ” என்ற உணா்வை ஏற்படுத்தல் வேண்டும். நாம் ஒருபோதும் சிங்களவா், தமிழா் முஸ்லீம், கிருஸ்த்தவா் என்றும் மதரீதியாக, இனரீதியாக சிந்திக்கக் கூடாது. இளைஞா்களாகிய நீங்கள் தான் கிராமங்கள் தோரும் சென்று நல்ல சிந்தனைகளை வளா்க்க வேண்டும். நாம் எல்லோரும் ஒரு குடையின் கீழ் வாழும் இலங்கையா் என்ற உணா்வு ஏற்படின் இந்த நாடு எதிா்காலத்தில் மிகச் சிறப்பாக அபிவிருத்தியடைந்து உலகில் உள்ள ஏனைய நாடுகளில் போட்டி போடக்கூடியதொரு சா்ந்தா்ப்பம் உருவாகும். 

இந்த நாட்டின் அபிவிருத்திக்காக நாம் பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளோம். இளைஞா்களாகிய நீங்கள் தான் நாளைய தலைவா்கள். நீங்கள் இந்த நாட்டில் நல்ல பிரஜைகளாக வளா்ந்து ஒரு நல்ல தொழிலைப் பெற்று அதனுடாக முன்னேறி குடும்பமாகி, வீடொன்றை நிர்மாணித்து, தமக்கென ஒரு மோட்டாா் பைசிக்கல், முச்சக்கர வண்டியாவது சொந்தக் காலில் நின்று நாம் வாங்குவதற்கும் உரிய தொழில் முறைகளை நாம் இந்த நாட்டில் ஏற்படுத்தவுள்ளோம். 

2015, 2016ஆம் ஆண்டும் கடன்களை அடைத்து வருகின்றோம். யுத்தம் நடைபெற்ற பிறகும் இரண்டாவது பரம்பரையினா்களுக்கு மேலாக உலக நாடுகளில் நாம் கடண்கள் பெற்றுள்ளோம். இக் கடன்கள் 2020ஆம் ஆண்டுதான் முடிவடையும். இக்கடன் தொகை அமேரிக்க டொலா் 400 கோடியாகும். 

அதற்காகவே ஜ.எம்.எப் (சர்வதேச நாணய நிதியத்துடன் ) இணைந்து இக் கடன்களை செலுத்துவதற்கு ஒரு சீரான முறைமையை வகுத்துள்ளோம். அதற்காகவே ஹம்பாந்தோட்டை, மொணராகலை, காலி, போன்ற மாவட்டங்களை கொண்டு பொருளாதார கேந்திர நிலையமாக அபிவிருத்தி செய்யவுள்ளோம், இதில் உள்ளடக்கப்பட்டுள்ள இரண்டு துறைமுகங்கள், விமாணநிலையங்கள் பயண்படுத்தப்படும், அதே போன்று திருகோணமலை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்கள் உல்லாச பிரயாண வலயங்களாக அபிவிருத்தி செய்யப்படும். 

அத்துடன் குருநாகலை, கண்டி போன்ற மாவட்டங்கள் பொருளாதார வலயமாகவும், 83இலட்சம் மக்களைக் கொண்டுள்ள மேல்மாகணம் மெகா பொலிஸ் திட்டத்தின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட உள்ளது. அத்துடன் ஆயிரம் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலிட ஆர்வம் தெரிவித்துள்ளனா். குருநாகலையில் உல்லாசத்துறைக்காக 400 ஏக்கா் காணி அடையாலம் காணப்பட்டுள்ளது. இந்தியாவில் சென்னை, துபாய் நகர் போன்று நாம் அபிவிருத்தி செய்தால் இலஙகை இளைஞா் யுவதிகள் யப்பானுக்கும், இந்தியாவுக்கும் சென்று இலங்கைக்கு பொருட்கள் எடுத்து வரத் தேவையில்லை. அத்துடன் வைத்தியம் செய்வதற்காக சிங்கப்புர் போகத் தேவையில்லை. எமது நாட்டில் இளைஞா்களுக்கு சிறப்பான ஒரு ஒளிமயமான அதிா்ஸ்டம் உண்டு. என பிரதம மந்திரி அங்கு உரையாற்றினாா்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -