புது வருடக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டிருந்த 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழப்பு -ஏறாவூரில் சம்பவம்

றாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள தளவாய்க் கிராமத்தில் புத்தாண்டு பிறப்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுவன் திடீரென விழுந்து மரணித்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர், புன்னைக்குடா வீதி, தளவாய் கிராமத்தைச் சேர்ந்த தயாகரன் மதுஷான் (11) என்ற சிறுவனே இன்று அதிகாலை மர்மமாக மரணித்துள்ளார்.

இதுபற்றி சிறுவனின் தந்தை சிவலிங்கம் தயாகரன் (வயது 34) தெரிவிக்கையில்,

தான் புன்னைக்குடாவில் ஆழ் கடல் தொழிலுக்குச் சென்று திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் மனைவியிடமிருந்து மகன் திடீரென விழுந்து மரணித்து விட்டதாக செய்தி கிடைத்தது. ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு மகன் கொண்டு செல்லப்பட்டபோதும் ஏற்கெனவே அவரது உயிர் பிரிந்;து விட்டிருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

எமது வீட்டு வளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய தேவாயலத்தில் நடந்த புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது அவர் நேற்று இரவிலிருந்து இன்று அதிகாலை வரை ஈடுபட்டிருந்ததாகவும் அவ்வேளையிலேயே திடீரென விழுந்து மரணித்து விட்டதாகவும் மனைவியிடமிருந்து அறியக் கிடைத்தது என்றார்.

பிரேத பரிசோதனைக்காக சிறுவனின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. வீரகேசரி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -