ஜெயலலிதாவின் வீட்டுப்பணிப்பெண் சசிகலா பொதுச்செயலாளரா..!? இராஜினாமாச் செய்த நிருவாகிகள்

திமுக பொதுச்செயலாளராக சசிகலா பதவியேற்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஈரோடு மாவட்டத்தில் அக்கட்சியின் நிர்வாகிகளில் இருவர் பதவி விலகியுள்ளனர்.

ஈரோடு மாவட்ட அதிமுக மீனவர் அணிச் செயலாளர் ஃபரூக் அலி, ஜெயலலிதா பேரவை நகர இணைச்செயலாளர் கமல் பாட்ஷா ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்.

இதற்கு காரணம் கூறும் சிலர் ஜெயலலிதாவின் வீட்டுப்பணிப்பெண் போன்று செயற்பட்ட சசிகலாவுக்கு தமிழ் நாட்டையாளும் கட்சியின் செயலாளர் பதவி கொடுப்பதா..? என ஆதங்கம் வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் சசிகலா அதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அதிமுகவின் ஒரு பிரிவினர் கடலூரில் கருப்பு பேட்ஜ் அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் சிலர் ‌ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவின் புகைப்படத்தை கைகளில் ஏந்தி போராட்டத்தில் கலந்துகொண்டனர்.

கடந்த 2011 டிசம்பர் மாதமளவில் ஜெயலலிதாவினால்
அ.தி.மு.கவிலிருந்தும் அதன் அடிப்படை உறுப்பினர்கள் தகுதியிலிருந்தும் சசிகலா மற்றும் அவரது கணவர் நடராஜன் உள்ளிட்ட பன்னிரெண்டு உறவினர்கள் அடங்கிய மன்னார்குடி கும்பல் நீக்கப்பட்டிருந்ததும் கவனிக்கப்படவேண்டியது என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -