எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது பழைய சந்தை வீதியில் உள்ள வடிகான்களில் நிரம்பியிருந்த கழிவுகள் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் துப்பரவு செய்யப்பட்டு தெருவில் கொட்டப்பட்டிருந்த நிலையில் அம்மண் அகற்றப்படாமல் துர் நாற்றம் வீசுவதால் பிரதேச மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
மழை காலம் என்பதால் பல்வேறு தொற்று நோய்களும் இதனால் ஏற்படும் ஆபத்து காணப்படும் இவ் வீதியில் நிரம்பியுள்ள கழிவுகளை சுத்தப்படுத்தி நோய்களிலிருந்து மக்களை பாதுகாக்க உதவுவதோடு இவ்வீதி போக்குவரத்திற்கு இடைஞ்சலாகவுள்ள இக் கழிவு மண்ணை துப்பரவு செய்ய உதவுமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளை மக்கள் வேண்டி நிற்கின்றனர்.
