இலங்கை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை நோக்கிச்செல்லும் அனைத்து இலங்கை விமானங்களும் நாளை வரை சேவையில் ஈடுப்படாது என விமான நிலைய வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.
வர்தா புயல் அச்சம் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி UL - 121, UL - 123, UL - 127 மற்றும் UL – 129 ஆகிய இலங்கை விமானங்களின் சேவைகளே இவ்வாறு இடை நிறுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விமானப் பயணிகள் இது தொடர்பில் மேலதிக விபரங்களை தெரிந்து கொள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவையினை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
