இந்தியாவின் தி.முக. தலைவர் கருணாநிதிக்கு மூச்சுதிணறல் தொடர்பாக “ட்ரக்கோஸ்டமி” கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்படுவதாக காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி நேற்று 15 ஆம் திகதி தொண்டை மற்றும் நுரையீரல் தொற்று காரணமாக சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நலம் தொடர்பாக அம்மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில்;
நேற்று அனுமதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று மூச்சுத்திணறலை சரி செய்யும் ட்ரக்கியோஸ்டமி கருவி மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. தற்போது உடல்நிலை சீராக உள்ளது. தேவையான நோய் எதிர்ப்பு மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
