சல்மானின் தேசியப்பட்டியல் தலைவர் ஹக்கீமின் பொறுப்பில் -யாருக்கு அதிஷ்டம்

அபூ மபாஸ்-

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் சர்ச்சை ஒருவாறு அமைதி அடைந்திருக்கும் இவ்வேளை அடுத்த பூதாகரமான பிரச்சனை யாருக்கு தேசியப்பட்டியல் என்பது. ஆனால் கட்சிக்கு கிடைத்த இரண்டு தேசியப்பட்டியலையும் பொறுமையுடன் பகிர்ந்தளிக்க கட்சியின் தலைவரால் பொறுபளிக்கப்பட்ட டாக்டர் கபீஸ் இவர் தலைவரின் மூத்த சகோதரர், அடுத்தவர் சட்டத்தரணி சல்மான் இவர் தலைவரின் உறவு முறைக்காறர் என்றாலும் பெருந்தலைவரின் காலத்தில் இருந்து கட்சிக்காக குரல் கொடுத்துக்கொண்டிருப்பவர் என்பதுடன் தலைவர் ரவூ ஹக்கீமுக்கு முதல் கட்சியில் இணைந்து கொண்டமையும் சுட்டிக்காட்டவேண்டியுள்ளது.

அந்த வகையில் தேசியப்பட்டியலைப் பொறுப்பேற்ற தலைவரின் சகோதரர் டாக்டர் ஹபீஸ் கடந்த வருடமே அதனை திருகோணமலையைச் சேர்ந்த கட்சியின் மூத்த உறுப்பினரும் முன்னாள் போக்குவரத்து பிரதி அமைச்சராகவும் இருந்து கடந்த பொதுத் தேர்தலில் தோல்வியைத் தழுவிய எம்.எஸ்.தெளபீக் அவர்களுக்கு வழங்கவேண்டும் என்றவுடனேயே திருப்பிக் கொடுத்திருந்தார்.

மீதமுள்ள அதாவது சட்டத்தரணி சல்மானிடம் இருக்கும் தேசியப்பட்டியல் வழங்கப்படவிருப்பது யாருக்கு என்ற எதிர்பார்ப்புடன் தலைவரின் வாக்குறுதிக்கமைய அட்டாளைச்சேனை முன்னிலையிலும், கல்குடா மற்றும் புத்தளம், வன்னி போன்ற ஊர்களும் காத்திருப்பில் இருந்து கொண்டிருக்கின்றன. ஆனால் பாராளுமன்ர உறுப்பினர் சல்மான் கடந்த சில மாதங்களுக்கு முதலே தனது இராஜினாமாக் கடிதத்தை தலைவரிடம் கொடுத்திருந்தார். தலைவர் நினைக்கும் நேரத்தில் திகதியினையிட்டு யாருக்கும் வழங்கலாம் என்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறது.

எனவே இந்த தேசியப்பட்டியல் யாருக்கு எப்போது கொடுக்கப்படும் என்ற இறுதிநேர எதிர்பார்ப்பில் இருக்கும் மக்களுக்கு முடிவும் கிடைத்து விட்டது.

அது என்ன முடிவு யாருக்கு என்பது விரைவில்

தேசியப்பட்டியலை சுவீகரித்துக் கொள்ளும் நபர் யார்...? தொடரும்:...
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -