இணையத்தளங்களின் நடவடிக்கை தொடர்பில் கடுமையாக அவதானிக்கப்படும்- பிரதமர் அறிவிப்பு

ணையத்தளங்களின் நடவடிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் மிகவும் அவதானத்துடன் உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

தொலைக்காட்சி, வானொலியைப் போன்று சமூக வலைத்தளங்களை கட்டுப்படுத்த முடியாதுள்ளது. இன்று சமூக வலைத்தளங்கள் தனக்கு வேண்டியதைக் கதைக்க முடியுமான நிலையில் காணப்படுகின்றது.

வெலிமடையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து இதனைக் கூறியுள்ளார். நாட்டின் வானொலி, தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகளை கட்டுப்படுத்த சட்டங்கள் இருக்கின்றன.

ஆனால் இணையத்தளங்களை கட்டுப்படுத்த சட்டங்கள் இல்லை. சமுக வலைதளங்களின் ஊடாக எவ்வாறான செய்திகளையும் வெளியிட முடியும். எவ்வாறான தகாத வார்த்தைகளையும் பிரயோகிக்க முடியும். இதனால் சமுகத்துக்கும் தனி நபர்களுக்கும் பாதிப்புகள் ஏற்படுமாக இருந்தால், அதனை கட்டுப்படுத்துவற்கான சட்டத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். அத்துடன் கவனமாக கவனிக்கப்படவும் வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரம சிங்க தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -