பேஸ்புக் சமூகவலைத் தளத்தின் மூலம் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவருக்கு மரண அச்சுறுத்தல் விடுத்ததாக கூறப்பட்டு விளக்கமறியலில் இருந்த இளைஞருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
ஒரு இலட்சம் ரூபாவான இரண்டு சரீரப் பிணையில் சந்தேகநபரான இளைஞரை விடுவிக்க கொழும்பு மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல இன்று உத்தரவிட்டார்.
சந்தேகநபரின் பேஸ்புக் பதிவுகள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் பிணை வழங்க எதிர்ப்பு ரெிவிப்பதாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் இன்று நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்தியுள்ளனர்.
எனினும் சம்பவம் தொடர்பான ஆரம்பகட்ட விசாரணைகள் நிறைவு பெற்றிருப்பதால் பிணை வழங்குமாறு சந்தேகநபர் நபர் சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி நீதிமன்றில் கூறியிருந்தார்.
அதன்படி சந்தேகநபருக்கு பிணை வழங்கியதுடன், அடுத்த மாதம் 13ம் திகதி வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
