கல்முனை கிறீன்பீல்ட் பாலர் பாடசாலை வருடாந்த பரிசளிப்பு விழா..!

ஹாசிப் யாஸீன், அகமட் எஸ்.முகைடீன் -
ல்முனை கிறீன்பீல்ட் பாலர் பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்முனை ஆஸாத் பிளாஸாவரவேற்பு மண்டபத்தில் இன்று (29) வியாழக்கிழமை இடம்பெற்றது.

கிறீன்பீல்ட் பாலர் பாடசாலை இயக்குனர் ரீ.ஆர்.ஏ.ரஹ்மான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சாய்ந்தமருது அல்-ஹிலால் வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்.பைசால், கல்முனை வலய முன்பள்ளி கல்வி இணைப்பாளர் அஷ்-ஷெய்க் ஐ.எல்.எம்.அனீஸ், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரியும், முன்னாள் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான கே.எம்.தௌபீக், ஏ.எம்.றினோஸ், கல்முனை கிறீன்பீல்ட் முகாமைத்துவ குழுவின் தலைவர் ஏ.எல்.எம்.ஹபூல் ஆஸாத் உள்ளிட்ட பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் இடம்பெற்றதுடன் மாணவர்கள் அதிதிகளினால் பதக்கம், கிண்ணம், சான்றிதழ் என்பன வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது நிகழ்வின் பிரதம அதிதி பிரதி அமைச்சர் ஹரீஸ் கிறீன்பீல்ட் பாலர் பாடசாலை இயக்குனர்சபை உறுப்பினர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -