ஐரோப்பாவில் அழகு ராணியான மீனவ குடும்பத்தைச் சேர்ந்த இலங்கைப் பெண்..!

2016 ஆண்டு ஐரோப்பிய இலங்கை அழகு ராணியாக (Miss Sri Lanka in Europe 2016) சபிதா தோமஸ் தெரிவாகியுள்ளார். இம்முறை ஐரோப்பாவின் இலங்கை அழகு ராணியாக தெரிவாகியுள்ள சபிதா தோமஸ் நீர்கொழும்பில் இருந்து ஐரோப்பா சென்ற பெண்ணாகும்.

தற்போது டென்மார்க்கில் வசிக்கும் அவர் நீர்கொழும்பு கெபுன்கொட பிரதேசத்தைச் சேர்ந்த மீனவ குடும்பத்தைச் சேர்ந்தவர். ஐரோப்பா முழுவதும் இலங்கை கொடியை நாட்டும் எதிர்பார்ப்பில் சபிதா தோமஸ் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபிதா தோமஸ் தமது குடும்பத்தினருடன் அடிக்கடி இலங்கை வந்து செல்வதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளதுடன் ஜனாதிபதி மைத்திரிபாலவை சந்தித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -